திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. முக்கிய தரிசனம் ரத்து காரணம் இதோ

By Sakthi Raj Jun 28, 2026 08:37 AM GMT
Report

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு உலகமெங்கிலும் இருக்கக்கூடிய பக்தர்கள் வருகை தருகின்றன. அப்படியாக, திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமானதை அடுத்து தேவஸ்தானம் அதிரடி முடிவு எடுத்திருக்கிறார்கள். அதாவது விஐபி தரிசன டிக்கெட் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் ஏழுமலையான் கோவில் அமைந்திருக்கிறது. மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பதியில் ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் வெளிநாடு, வெளி மாநிலங்கள் என்று பக்தர்கள் வருகை தந்து தரிசனத்திற்காக மணி கணக்கில் காத்து இருக்கின்றனர்.

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. முக்கிய தரிசனம் ரத்து காரணம் இதோ | Tirupathi Ttd Update On Vip Darshan Cancel On June

12 ராசியினரும் அவர்கள் வீட்டை எப்படி கோவிலாக மாற்றுகிறார்கள்.. தெரியுமா?

12 ராசியினரும் அவர்கள் வீட்டை எப்படி கோவிலாக மாற்றுகிறார்கள்.. தெரியுமா?

பக்தர்களுக்கு பல்வேறு தரிசன டிக்கெட் தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது. ரூபாய் 300 தரிசன டிக்கெட் விஐபி தரிசன டிக்கெட் மூத்த குடிமக்கள் என தரிசன டிக்கெட் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

தற்போது தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.

தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கொண்டு உள்ளதால் ஜூன் 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. ரூபாய் 300 தரிசன டிக்கெட் மூலம் பக்தர்கள் மூன்று மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றார்கள்.

மேலும், சர்வ தரிசனம் மூலம் ஆறு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருவதாக கூறப்படுகிறது. வழக்கமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சராசரியாக 85 ஆயிரம் முதல் 87 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்வது உண்டு.

இருப்பினும் சனிக்கிழமை ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் ஸ்ரீ வாரி தரிசனத்திற்காக வந்திருப்பது திருப்பதி ஏழுமலையான் வரலாற்றிலேயே மிகவும் அரிதான நிகழ்வாக கருதப்படுகிறது.

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. முக்கிய தரிசனம் ரத்து காரணம் இதோ | Tirupathi Ttd Update On Vip Darshan Cancel On June

தினமும் இறைவழிபாடு செய்ய உகந்த நேரம்.. இதை தவற விடாதீர்கள்

தினமும் இறைவழிபாடு செய்ய உகந்த நேரம்.. இதை தவற விடாதீர்கள்

பல லட்சம் எண்ணிக்கை கொண்ட பக்தர்கள் வருகை தந்திருப்பதால் திருமலை தேவஸ்தானம் சிறப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

பொது பக்தர்கள் தரிசனத்தை எளிமையாகும் வகையில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வழங்கப்படும் 800 ஸ்ரீவாரி அறக்கட்டளை விஐபி தரிசன டிக்கெட் நாளை ஜூன் 29 திங்கட்கிழமை அன்று ரத்து செய்வதாக தேவஸ்தானம் அறிவித்திருக்கிறது.

இதனால் இன்று ஞாயிற்றுக்கிழமை விஐபி தரிசனத்திற்காக பரிந்துரை கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்திருக்கிறது. ஆதலால், பக்தர்கள் இந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு திருமலைக்கான பயணத் திட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US