மே மாத சிறப்பு உற்சவங்கள் - திருப்பதி ஏழுமலையான் கோயில்
By Kirthiga
உலகத்திலேயே அதிகளவிலான மக்கள் தினமும் வருகை தரும் கோயிலாக இன்று வரையில் இருந்து வருகிறது திருப்பதி ஏழுமலையான் கோயில்.
இந்தக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் சிறப்பான உற்சவங்கள் நிகழ்ந்துக்கொண்டே இருக்கும். அந்தவகையில் மே மாதத்திற்கான உற்சவங்களின் பட்டியல் தற்போது கோயில் நிர்வாகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
மே மாத உற்சவங்கள் |
திகதி | உற்சவங்கள் |
மே -3 | பாஷ்யகர்ல உற்சவம் |
மே - 4 | சர்வ ஏகாதசி |
மே - 10 | அட்சய திருதியை |
மே - 12 | பாஷ்யகர்ல சாற்றுமுறை, ராமானுஜ ஜெயந்தி, சங்கர ஜெயந்தி |
மே 17 - மே 19 | பத்மாவதி பரிணய உற்சவம் |
மே - 22 | நரசிம்ம ஜெயந்தி மற்றும் தரிகொண்டா வெங்க மாம்பா ஜெயந்தி |
மே - 23 | அன்னமாச்சாரியா ஜெயந்தி, கூர்ம ஜெயந்தி |
மேலும் திருப்பதி கோயிலில் நேற்று 86, 241 பேர் தரிசனம் செய்துள்ளனர். 31,730 பக்தர்கள் முடி காணிக்கையும் ரூ.3.65 கோடி உண்டியல் காணிக்கையும் வசூல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |