மனிதர்களை அழிக்க வந்த மண் மழை.. கடுந்தவம் செய்து காப்பாற்றிய அம்பாள்
முன்னொரு காலத்தில் மனிதர்கள் பூமியில் செய்து கொண்டிருந்த பாவ செயல்களை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஈசன் பூமியை அழிப்பதற்காக மண்மாரி பொழியச் செய்தார். ஈசனின் கோபத்தினால் பூமியை ஆக்ரோஷமாக அழிக்க துடித்துக் கொண்டு இருந்த அந்த மண் மாரியால் உலகம் ஒரு நேரத்தில் அழியும் நிலைக்கே வந்துவிட்டது.
அந்த நேரத்தில் தான் அன்னை பார்வதி தேவி மக்களை காப்பாற்ற கடும் தவம் செய்ய தொடங்கினார். அவ்வாறு அன்னை தவம் செய்த இடம் எங்கே? என்ன நடந்தது என்பதை பற்றி பார்ப்போம். திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூரில் என்னும் ஊரில் கோவர்த்தனாம்பிகை திருக்கோயில் அமைந்திருக்கிறது.

"கோ" என்றால் பூமி "வர்தனம்" என்றால் காத்தல் என்று பொருள். சிவபெருமானுடைய கோபத்தினால் ஏற்பட்ட அந்த மண் மாரியை தடுத்து நிறுத்த அன்னை தவம் செய்ததால் அன்னைக்கு கோவர்த்தனாம்பிகை என்ற பெயர் வந்தது. இங்கு பக்தர்களை காப்பாற்றுவதற்காக இந்த தலத்தில் அன்னை மேற்கு நோக்கி கடும் தவம் புரிந்தார்.
பேராபத்தை தடுத்து நிறுத்த கடும் தவம் செய்த அன்னைக்கு சிவபெருமான் காட்சி கொடுக்க உத்தமலிங்கேஸ்வரர் என்று திருநாமத்துடன் மேற்கு நோக்கியே அருள்பாலிக்கிறார். இவ்வாறு சிவபெருமான் கொடுக்கக்கூடிய தரிசனமானது மிகவும் அற்புதமான மற்றும் அபூர்வமான தரிசனம் ஆகும்.

மேலும், இந்தக் கோயில் உத்தம சோழ மன்னர்களால் கட்டப்பட்ட கலை நயமிக்க அற்புதமான ஆலயம் ஆகும். அதோடு நாயன்மார்களான சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமானும் நேரில் வந்து வழிபட்ட பெருமையும் இந்த தலத்திற்கு உண்டு.
அதோடு நீண்ட நாட்களாக பக்தர்களுக்கு திருமண தடை இருக்கிறது அல்லது குழந்தை பெறுவதில் தாமதம், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், எதிரிகளால் தொல்லை போன்ற இக்கட்டான நிலையில் இருப்பவர்கள் கட்டாயமாக இத்தலத்திற்கு வந்து ஈசனையும் அன்னையையும் வழிபாடு செய்தால் நிச்சயம் அவர்களுடைய குறைகள் எல்லாம் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |