திருப்புகழ் எனும் மாமருந்து
நம்மில் நிறைய பழக்கவழக்கங்கள் மாறுபடும்.சிலருக்கு தீய பழக்கம் சிலருக்கு நல்ல பழக்கம் ஆவதும்.நல்ல பழக்கவழக்கத்தை கண்டு கொள்ளாமல் உதாசீன படுத்துவதும் என்று சிலர் செய்வது உண்டு.
அவர்களுக்கு ஏற்றார் போல் ஒரு நியதி என்றாலும்,உண்மையில் இயற்கையின் பக்கமும் கடவுளின் பக்கமும் எந்த ஒரு பாரபட்சம் இன்று ஒரு நியதி இருக்கும்.அதன் பெயர் தான் நியாயம்.உண்மை என்று சொல்லுவோம்.
அப்படியாக அந்த நியாயமான செயல் செய்ய தீய செயல்கள் நம்மை விட்டு ஓட நாம் பாட வேண்டிய திருப்புகழ்.எவர் ஒருவர் இந்த திருப்புகழை பாராயணம் செய்கிறார்களோ அவர்கள் வாழ்க்கை தர்மத்தின் பக்கம் நின்று நல்ல குணாதிசயம் பிறப்பதை பார்க்கமுடியும்.
இறையத் தனையோ அதுதானும்
இலையிட் டுணலேய் தருகாலம்
அறையிற் பெரிதா மலமாயை
அலையப் படுமா றினியாமோ
மறையத் தனைமா சிறைசாலை
வழியுய்த் துயர்வா னுறுதேவர்
சிறையைத் தவிரா விடும்வேலா
திலதைப் பதிவாழ் பெருமாளே
விளக்கம்
பிறருக்கு உணவிட்டு பிறகு நான் உணவருந்தும் நல்ல பண்பு என்னிடம் இருந்த காலம் என்று சொல்லிக் கொள்ள ஓர் அணு அளவு கூட என்னிடம் வாய்ப்பு இருந்ததில்லை மாறாக அதிகம் துர்குணங்கள் தான் நிறைந்திருந்தன.
அதனால் அகங்காரமும் கூடியது இது எதுவும் என்னிடம் இனி ஒரு கணமும் இருக்கக் கூடாது, அதற்கு நீ தான் அருள வேண்டும் முருகப் பெருமானே.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |