திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்
திருத்தணி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
12 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை பெருவிழா நாளை மறுநாள் (30.4.2025) காலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மே 2ஆம் திகதி காலை வெள்ளி சூரிய பிரபை வாகனத்திலும் இரவு பூத வாகனத்திலும், 3ஆம் திகதி காலை சிம்ம வாகனத்திலும் இரவு ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், 4ஆம் திகதி காலை பல்லக்கிலும், இரவு வெள்ளி நாக வாகனத்திலும் காட்சியளிக்கிறார்.
5ஆம் திகதி காலை அன்ன வாகனத்திலும் இரவு வெள்ளி மயில் வாகனத்திலும், 6ஆம் திகதி மாலை 4:30 மணிக்கு புலி வாகனத்திலும் இரவு 7 மணிக்கு யானை வாகனத்தில் சுவாமி காட்சியளிக்கிறார்.
முக்கிய நிகழ்வான தேரோட்டம் 7ஆம் திகதி இரவு 7மணிக்கு நடக்கிறது.
மேலும், 8ஆம் திககி யாளி வாகன சேவை, குதிரை வாகன சேவை மற்றும் தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |