திருவண்ணாமலை தீபத் திருவிழா.., பந்தக்கால் நட்டு பணிகள் தொடங்கின
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவில் உலகப் பிரசித்தி பெற்ற ஒரு கோவில்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் இத்தலம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும்.
இக்கோவிலில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் மாதம் 1ஆம் திகதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது.
4ஆம் திகதி அதிகாலை அருணாசலேஸ்வரர் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.
அன்று முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு காலை மற்றும் இரவில் பஞ்ச மூர்த்திகள் மாடவீதி உலா நடைபெறும்.
13ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
கார்த்திகை தீபத் திருவிழா பூர்வாங்க பணிகள் செய்வதற்கான பந்தக்கால் முகூர்த்தம் நேற்று நடந்தது.
அருணாசலேஸ்வரர் கோவில் சன்னதியில் உள்ள சம்பந்த விநாயகர் மற்றும் பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.
இதனை தொடர்ந்து கோவிலில் இருந்து பந்தக்கால் எடுத்து வரப்பட்டு ராஜகோபுரம் முன்பு நடப்பட்டது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |