எது சிறந்த நூல்?புலவர்கள் இடையே நடந்த போட்டி
சிவன் நடத்திய திருவிளையாடல் புராணம் ஏராளம்.அதில் மதுரையில் தான் அதிக திருவிளையாடல் புராணம் நிகழ்த்தி உள்ளார்.அதில் ஒரு முறை சங்கப்புலவர்கள் இடையே கடும் போட்டி நிலவியது.
அதாவது தான் இயற்றிய இலக்கண நூலில் யார் எழுதிய நூல் மேலானது என்று அந்த போட்டி.குறிப்பிட்ட காலத்திற்கு மேல் போட்டி முற்றி பெரும் சண்டை ஆனது.
இதற்கு ஒரு தீர்வு வேண்டும் என்று எல்லோரும் கயற்கண்ணி ஆலயம் சென்று இறைவனிடம் நடந்த விவரத்தை சொல்லி தாங்கள் தான் நல்வழி காட்ட வேண்டும் என்று முறையிட்டனர்.
அதற்கு சிவ பெருமான் அசரீரியாக தோன்றி புலவர்களே தங்கள் கேட்ட விருப்பத்தின் படி இவ்வூரில் தனாபதி என்ற வணிகன் இருக்கிறார்.அவனும் அவன் மனைவியும் சிவபக்தியும் நல்லொழுக்கம் கொண்ட சிறந்த தம்பதியினர்.
திருமணம் ஆகி நீண்ட நாள் குழந்தை வரம் இல்லாமல்,பின் தவமிருந்து ருத்திரசர்மன் என்று அழகிய ஆண்குழந்தையை பெற்று எடுத்து இருக்கின்றனர்.
ஆனால் ருத்திரசர்மன் வாய் பேச முடியாது.அவன் முருகனின் அம்சம்.புலவர்கள் நூல்களில் உள்ள ஏற்ற தாழ்வை அவனிடம் கேளுங்கள் என்றார் சிவ பெருமான்.
புலவர்களுக்கு ஒரே குழப்பம்.வாய் பேசமுடியாத பையன் எப்படி எது சிறந்த நூல் என்று கணித்து சொல்லமுடியும் என்று.இந்த சந்தேகத்தை சிவனிடம் கேட்க,சிவபெருமான் வாய் மாட்டும் தானே பேசமுடியாது.
எது சிறந்து நூல் என்று சொல்ல உணர்வுகள் இருந்தால் போதுமானது.அதாவது ருத்திரசர்மன் யாருடைய நூலைப் படிக்கையில் அவன் தன்னை மறந்து கண்ணீர் வழிந்து படிக்கிறானோ அவைகள் உயர்ந்தவை என்று கருத்தில் கொள்ளுங்கள் என்றார்.
சிவ பெருமானின் வாக்கை வாங்கிக்கொண்டு புலவர்கள் ருத்திரசர்மன் என்ற சிறுவனை பார்க்க சொல்லுகின்றனர்.அங்கு சென்று சிறுவனுக்கு மரியாதை செய்து சங்க பலகையில் அமர வைத்து ஒவ்வொரு நூலாகப் படித்தனர்.
அப்பொழுது நக்கீரர்,கபிலர்,பாணர்,இவர்களுடைய நூல்களை படிக்கையில் ருத்திரசர்மன் கண்களில் கண்ணீர் வலிந்து ஓடியது.அதனால் அவர்களின் நூல்களே மேலானது என்று எல்லோரும் ஒப்புக்கொண்டனர்.
புலவர்கள் இடையே நடந்த சண்டையை ருத்திரசர்மன் என்ற சிறுவன் வழியாக தீர்த்து வைத்த இந்த 55ஆம் திருவிளையாடலை தினமும் பக்தியோடு படிப்பவருக்கு கேட்பவரும் கவி இயற்றும் திறமையும் கற்பனை வளமும் பெருகும்.கல்வி கலைகளில் தனித்தன்மை பெற்று விளங்குவார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |