நாளைய ராசி பலன் (16-04-2026)

Report

மேஷம்:

இன்று பிரிந்து சென்ற நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். ஒரு சிலருக்கு உடல் சோர்வு மனச்சோர்வு உண்டாகலாம். வெளியே செல்லும் பொழுது பொருட்களில் கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்:

குடும்ப வாழ்க்கை பற்றிய முக்கியமான முடிவுகள் எடுப்பீர்கள். நண்பர்களின் தேவை இல்லாத ஆலோசனைகளால் சில சிக்கல் வரலாம். எதையும் நிதானமாக யோசித்து முடிவு எடுக்க வேண்டிய நாள்.

மிதுனம்:

மாணவர்களின் உயர்கல்விக்கான பேச்சுவார்த்தை நல்ல முடிவை தரும். பெற்றோர்கள் உங்களுடைய முடிவுகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நன்மையான நாள்.

கடகம்:

வெளிநாடு செல்ல வேண்டும் என்று காத்திருப்பவர்களுக்கு நற்செய்தி வந்து சேரும். பிள்ளைகள் எதிர்கால தேவைக்கு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

2026: சித்திரை மாதத்தில் வரக்கூடிய முக்கியமான விரதம் மற்றும் சுபமுகூர்த்த நாட்கள்

2026: சித்திரை மாதத்தில் வரக்கூடிய முக்கியமான விரதம் மற்றும் சுபமுகூர்த்த நாட்கள்

சிம்மம்:

ஒரு சிலருக்கு கடன் தொல்லையால் மன அழுத்தம் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். மதியம் மேல் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

கன்னி:

உடன் பிறந்த சகோதரர்களால் சந்தித்த பிரச்சனைகள் விலகும். குடும்பத்தில் உங்களுடைய பேச்சுக்கு மரியாதை கொடுப்பார்கள். வேலை பளு அதிகரிக்கலாம்.

துலாம்:

இன்று எதிர்பாராத முக்கிய நிகழ்வுகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். புதிய நட்புகளின் அறிமுகம் பெறுவீர்கள்.

விருச்சிகம்:

மருத்துவம் சார்ந்த விஷயங்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலைக்காக இடம் மாறுதலை பற்றி ஆலோசனை செய்வீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

தனுசு:

உடல் சோர்வு உண்டாகலாம். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை வரும். மதியமே பொருளாதார சிக்கல்கள் விலகக் கூடிய நாள். தேவையில்லாத வார்த்தைகளை குடும்பத்தில் பயன்படுத்தாதீர்கள்.

உங்கள் ராசிக்கு வெற்றியை கொடுக்கும் தெய்வங்கள் யார் தெரியுமா?

உங்கள் ராசிக்கு வெற்றியை கொடுக்கும் தெய்வங்கள் யார் தெரியுமா?

மகரம்:

வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். காதல் வாழ்க்கையில் சில விரிசல் ஏற்படலாம் வார்த்தைகளில் கவனம் வேண்டும். வேலைக்காக சில பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

கும்பம்:

அரசு வேலை பார்ப்பவர்களுக்கு இன்று முக்கியமான நாள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வரும். சொந்தங்களை சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

மீனம்:

இன்று பிள்ளைகளின் திருமண பேச்சு நல்ல முடிவை பெறும். தவறான புரிதல் கொண்டவர்கள் விலகிச் செல்வார்கள். அலுவலகத்தில் சம்பள உயர்வு பற்றி ஆலோசனை செய்வீர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US