உங்கள் ராசிக்கு வெற்றியை கொடுக்கும் தெய்வங்கள் யார் தெரியுமா?

By Sakthi Raj Apr 15, 2026 09:39 AM GMT
Report

 ஜோதிடத்தில் 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு உபாசன தெய்வங்கள் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. அந்த தெய்வங்களை அவர்கள் வாரத்தில் ஒரு நாள் அல்லது தினமும் மனதார அமர்ந்து வழிபாடு செய்தால் அவர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் கிடைக்கும். அப்படியாக 12 ராசிகளுக்கு உரிய உபாசன தெய்வங்கள் யார் என்று பார்ப்போம்.

உங்கள் ராசிக்கு வெற்றியை கொடுக்கும் தெய்வங்கள் யார் தெரியுமா? | Upasana God According To 12 Zodiac

2026: நாளை சித்திரை மாதத்தின் முதல் பிரதோஷம்.. சிவன் அருள் பெற செய்யவேண்டியவை

2026: நாளை சித்திரை மாதத்தின் முதல் பிரதோஷம்.. சிவன் அருள் பெற செய்யவேண்டியவை

மேஷம்:

மேஷ ராசியினருக்கு உபாசன தெய்வமாக முருகப்பெருமான் இருக்கிறார். இவர்கள் முருகப்பெருமானை சரண் அடைந்தால் அவர்களுக்கு துணிவு, வெற்றி, தைரியம் ஆகியவை கிடைக்கும்.

ரிஷபம்:

ரிஷப ராசியினருக்கு உபாசன தெய்வமாக மஹாலட்சுமி தேவி இருக்கின்றாள். இவர்கள் மஹாலட்சுமி தேவியை வழிபாடு செய்யும் பொழுது நல்ல செல்வ வளமும், குடும்பத்தில் அமைதியும் கிடைக்கும்.

மிதுனம்:

மிதுன ராசியினருக்கு உபாசன தெய்வமாக விஷ்னு பகவானும் கிருஷ்ணரும் இருக்கிறார்கள். இவர்கள் கிருஷ்ணரை பற்றிக் கொண்டால் நல்ல அறிவாற்றலும் மன தெளிவும் கிடைக்கும்.

கடகம்:

கடக ராசியினருக்கு உபசான தெய்வமாக பார்வதி தேவியும், அம்மனும் இருக்கிறார்கள். இவர்களை பற்றிக் கொண்டால் இவர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் சந்திக்கின்ற பிரச்சனைகள் விலகும்.

சிம்மம்:

சிம்ம ராசியினருக்கு உபாசன தெய்வமாக சூரிய பகவானும் சிவபெருமானும் இருக்கிறார்கள். இவர்களை பற்றிக் கொண்டால் மிகப்பெரிய அளவில் பெயரும் புகழும், தலைமைத்துவ பண்பிலும் சிறப்பும் சிறந்து விளங்குவார்கள்.

கன்னி:

கன்னி ராசியினரின் உபாசன தெய்வமாக ஹயக்ரீவர் இருக்கிறார். இவரை வழிபாடு செய்யும் பொழுது சிறந்த கல்வியும் நியாபக திறனும் மேம்படும்.

இந்த 4 தேதியில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் பணப் பிரச்சனையே வராதாம்

இந்த 4 தேதியில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் பணப் பிரச்சனையே வராதாம்

துலாம்:

துலாம் ராசியினரின் உபாசன தெய்வமாக லட்சுமி தேவியும் சரஸ்வதியும் இருக்கிறார்கள். இந்த இருவரையும் இவர்கள் வழிபாடு செய்யும்பொழுது சமநிலையான மனநிலையும் கல்வி மற்றும் கலைகள் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியினரின் உபாசன தெய்வமாக காளி மற்றும் சுப்பிரமணிய சுவாமி இருக்கிறார்கள். இவர்கள் இருவரையும் இவர்கள் பற்றிக் கொள்ளும் பொழுது தைரியமும், மறைமுக ஆற்றலும், பாதுகாப்பான உணர்வும் இவர்களுக்கு கிடைக்கிறது.

தனுசு:

தனுசு ராசியினரின் உபாசன தெய்வமாக தட்சிணாமூர்த்தி மற்றும் விஷ்ணு பகவான் இருக்கிறார்கள். இவர்கள் இருவரையும் இவர்கள் பற்றிக்கொள்ளும் பொழுது இவர்களுக்கு ஞானம் மற்றும் ஆன்மீகத்தில் நல்ல வளர்ச்சி கிடைக்கிறது.

மகரம்:

மகர ராசியினருக்கு உபாசன தெய்வமாக சனிபகவான் மற்றும் அனுமன் சிவபெருமான் இருக்கிறார்கள் இவர்கள் இருவரையும் இவர்கள் பற்றி கொள்ளும் பொழுது பொறுமை, உழைப்பு மற்றும் செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கிறது.

கும்பம்:

கும்ப ராசியினருக்கு உபாசன தெய்வமாக சனிபகவான் மற்றும் காளிதேவி இருக்கிறார்கள். இவர்களை வழிபாடு செய்யும் பொழுது இவர்களுக்கு புதிய சிந்தனைகளும், காரியங்களில் தடை விலகி, கடினமான காலங்களை கடக்க கூடிய ஆற்றலும் கிடைக்கிறது.

மீனம்:

மீன ராசி எனக்கு உபாசன தெய்வமாக விஷ்ணு பகவான் மற்றும் குருபகவான் இருக்கிறார்கள். இவர்கள் இருவரையும் பற்றிக்கொள்ளும் பொழுது கருணை சிந்தனையும், ஆன்மீக வளர்ச்சியும், மனதில் அமைதியையும் கொடுக்கிறது.     

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US