31 தானங்களும் பலன்களும்.. உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஆன்மீக ரகசியம்

By Sakthi Raj Jul 10, 2026 06:10 AM GMT
Report

இந்த உலகத்தில் நேரம் சரியில்லை என்றால் முன் ஜென்ம வினையால் தெரிந்தும் தெரியாமலும் பாவம் செய்ய நேருகிறது. அதற்காக வருந்தாமல் அதிலிருந்து விடுபடுவதற்கு நாம் ஒரு சில வழிபாடுகளையும் வழிமுறைகளையும் பின்பற்றினால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

அப்படியாக, நம்முடைய இந்து மத சாஸ்திரத்தில் ஒருவருக்கு தானம் வழங்குவது என்பது நமக்கு பல்வேறு வரை வகையான கர்ம பாவங்களை அவை கழிக்கிறது. அந்த வகையில், 32 தானங்களும் அதனால் கிடைக்கக்கூடிய நன்மைகளும் முக்கியத்துவத்தை பற்றியும் பார்ப்போம்.

31 தானங்களும் பலன்களும்.. உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஆன்மீக ரகசியம் | 31 Types Of Hindu Donation And Its Benefits

1. அன்னதானம்- நமக்கு கடன் தொல்லையை போக்கும்

2. அரிசி தானம்- முன் ஜென்ம பாவங்களை கரைக்கும்.

3. ஆடைகள் தானம்- சுகபோக வாழ்க்கை வழங்கும்.

4. பால்தானம்- துன்பங்களிலிருந்து உடனடி விடுதலை கொடுக்கும்.

5. நெய் தானம்- உடல் ஆரோக்கிய குறைகளை போக்கும்.

6. தேங்காய் தானம்-எடுத்த காரியங்களில் உடனடி வெற்றி கிடைக்கும்.

7. தீபதானம்-முன்னோர்களின் முழுமையான ஆசீர்வாதம் பெற்றுக் கொடுக்கும்.

8. பூமிதானம்- பிறவா நிலையை உண்டாக்கும்.

9. பழங்கள் தானம்- மன அமைதியை கொடுக்கும்.

10. வஸ்திரதானம்- ஆயுள் விருத்தியை உண்டாக்கும்.

11. கம்பளி தானம்-எவ்வளவு பெரிய மோசமான பிணியாக இருந்தாலும் அதிலிருந்து நிவாரணம் கொடுக்கும்.

31 தானங்களும் பலன்களும்.. உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஆன்மீக ரகசியம் | 31 Types Of Hindu Donation And Its Benefits

இந்த ஒரு வழிபாடு நொடியில் உங்கள் வாழ்க்கையை மாற்றும்.. என்ன தெரியுமா ?

இந்த ஒரு வழிபாடு நொடியில் உங்கள் வாழ்க்கையை மாற்றும்.. என்ன தெரியுமா ?

12. கோதானம்- பித்ரு தோஷத்தை போக்கும்.

13. தயிர் தானம்- இந்திரிய விருத்தி உண்டாகும்.

14. நெல்லிக்கனி தானம்- நம்முடைய அறிவை மேம்படுத்தும்.

15. தங்கம் தானம்- எப்பேர்ப்பட்ட தோஷத்தையும் நிவர்த்தி செய்யும்.

16. வெள்ளி தானம்- மனக் கவலைகளை போக்கும்.

17. கோதுமை தானம்- ரிஷிக்கடனை அகற்றும்.

18. எண்ணெய் தானம்- நல்ல ஆரோக்கியத்தை பெற்றுக் கொடுக்கும்.

19. காலனி தானம்- பெரியோர்களை அவமதித்த பாவத்தை போக்கும்.

20. மாங்கல்ய சரடு தானம்- தீர்க்க சுமங்கலியாக வாழக்கூடிய பாக்கியத்தை பெற்று கொடுக்கும்.

21. குடை தானம்- நினைத்த எதிர்காலத்தை உருவாக்கும்.

22. பாய்தானம்- அமைதியான மரணத்தை கொடுக்கும்.

23. காய்கறிகள் தானம்- குழந்தை ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் கொடுக்கும்.

24. பூதானம்- விரும்பிய இல்வாழ்க்கை பெற்றுக்கொடுக்கும்.

25. மாங்கல்ய தானம்- திருமண தடைகளை அகற்றும்.

26. மஞ்சள் தானம்- சுபிட்சத்தை உண்டாக்கும்.

பலருக்கும் ரோல் மாடலாக விளங்கும் 5 முக்கிய ராசிகள் யார் தெரியுமா?

பலருக்கும் ரோல் மாடலாக விளங்கும் 5 முக்கிய ராசிகள் யார் தெரியுமா?

27. எள் தானம் - மனதில் அமைதியை உருவாக்கும்.

28. வெல்ல தானம்- வம்சவிருத்தியை உண்டாக்கும்.

29. தண்ணீர் தானம்- குடும்பத்தில் மன மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் கொடுக்கும்.

30. சந்தன தானம்- கீர்த்தி உண்டாகும்.

31. புத்தக தானம்- கல்வி ஞானத்தை கொடுப்பதோடு சிறந்து விளங்கும் ஆற்றலை கொடுக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US