நாளைய ராசி பலன் (07-04-2026)

Report

மேஷம்:

இன்று சிலருக்கு மனக்குழப்பங்கள் வரலாம். திருமண வாழ்க்கையில் உங்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் சிறந்து விளங்கும்.

ரிஷபம்:

வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். குடும்பத்தில் உங்களுக்கு எதிராக சென்றவர்கள் விலகி செல்வார்கள். மனதில் இறைச்சிந்தனை அதிகரிக்கும். வேலை பளு அதிகரிக்கும்.

மிதுனம்:

வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த சிக்கல் விலகும். வியாபாரம் தொடர்பாக முக்கிய நபரிடம் ஆலோசனை செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் முழு கவனம் செலுத்த வேண்டும்.

கடகம்:

மனதில் தேவை இல்லாத குழப்பங்கள் தோன்றி மறையும். வாழ்க்கை துணையிடம் தேவை இல்லாத வாக்கு வாதம் செய்யாதீர்கள். பிள்ளைகள் எதிர்காலம் தொடர்பாக சில குழப்பங்கள் வரலாம்.

2026: கும்ப ராசியினர் ஏப்ரல் 8 முதல் 23 ஆம் தேதி வரை இதை செய்யாதீர்கள்

2026: கும்ப ராசியினர் ஏப்ரல் 8 முதல் 23 ஆம் தேதி வரை இதை செய்யாதீர்கள்

சிம்மம்:

மனதிற்கு பிடிக்காத எந்த ஒரு விஷயங்களை செய்யாதீர்கள். தேவை இல்லாத கோபமும் பதட்டமும் காலை முதல் காணப்படலாம். அரசியலில் கவனமாக செயல்பட வேண்டிய முக்கிய நாள்.

கன்னி:

திருமணம் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். வேலை செய்யும் இடத்தில் சற்று பொறுமையாக பேசுவது அவசியம். உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

துலாம்:

சுற்றி உள்ளவர்களின் உண்மை முகத்தை அறிந்து கொள்வீர்கள். பிள்ளைகள் எதிர்காலத்திற்கு தேவையான விஷயங்களை செய்துக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் வேண்டும்.

விருச்சிகம்:

எதிர்காலம் பற்றிய கவலையும் பயமும் வந்து செல்லும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு முழு ஆதரவு கொடுப்பார்கள். வங்கி தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ராகு தோஷம் இருப்பவர்கள் இந்த 3 பரிகாரம் செய்தால் வாழ்க்கையே மாறுமாம்

ராகு தோஷம் இருப்பவர்கள் இந்த 3 பரிகாரம் செய்தால் வாழ்க்கையே மாறுமாம்

தனுசு:

உங்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி வந்து வரும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்.

மகரம்:

தேவை இல்லாத சண்டை மற்றும் வாக்கு வாதம் வைத்துக் கொள்ளாதீர்கள். முடிந்த வரை கடன் வாங்குவதை தவிர்த்து விடுங்கள். மனதிற்கு பிடித்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்வீர்கள்.

கும்பம்:

குடும்பத்தில் உங்களுக்கு மதிப்பு உயரும் நாள். சிலருக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு அதிகரிக்கும். வெளிநாடு செல்ல முயற்சி எடுப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

மீனம்:

உங்கள் வீடுகளில் சில சண்டை வரலாம். பெற்றோர்களிடம் தேவை இல்லாத வாக்கு வாதம் செய்யாதீர்கள். சிலர் தான தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். இனிமையான நாள்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US