நாளைய ராசி பலன் (26-04-2026)

Report

மேஷம்:

வியாபாரத்தில் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். விலகிச் சென்றவர்கள் உங்களிடம் மீண்டும் வந்து பேசுவார்கள். இலக்கிய துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

ரிஷபம்:

பயணங்கள் வழியாக நல்ல அனுபவம் கிடைக்கும். புதிய மனை வாங்க கூடிய திட்டம் நிறைவேறும். நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியான நேரத்தை செலவு செய்வீர்கள்.

மிதுனம்:

வியாபார தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உங்களுடைய கற்பனைத் திறன் வளரும். கலைத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகளால் பாராட்டுக்களும் திறமையும் வெளிப்படும்.

உதயமானார் சனி பகவான்..பெயர் புகழ் பெறப்போகும் முக்கிய ராசிகள்

உதயமானார் சனி பகவான்..பெயர் புகழ் பெறப்போகும் முக்கிய ராசிகள்

 

கடகம்:

குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும். உங்களின் சாதுரியமான பேச்சால் நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் சில சங்கடங்களை சந்திப்பீர்கள்.

சிம்மம்:

இன்று தைரியமாக முடிவெடுக்கக் கூடிய சூழ்நிலை உருவாகும். உறவினர்களிடையே விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். முன் கோபத்தை தவிர்த்து பொறுமையுடன் செயல்பட வேண்டும்.

கன்னி:

எதிலும் பதற்றம் இன்றி நிதானமாக செயல்பட்டால் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். புதிய முதலீடு செய்வதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் இருந்த குழப்பங்கள் விலகும்.

துலாம்:

வழக்கு விஷயங்களில் உங்களுக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். புதிய வேலை மாற்றத்திற்கான சூழல் சாதகமாக அமையும். சகோதரர்களின் எண்ணங்களை புரிந்து நடந்து கொள்வீர்கள்.

வாஸ்து: இரவு நேரத்தில் ஒருபொழுதும் இந்த 4 பொருட்களை திறந்து வைக்காதீர்கள்.

வாஸ்து: இரவு நேரத்தில் ஒருபொழுதும் இந்த 4 பொருட்களை திறந்து வைக்காதீர்கள்.

விருச்சிகம்:

வேலை மாற்றங்கள் பற்றி சிந்தனை மனதில் ஓடும். உடன் பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதுவிதமான அனுபவங்களால் வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொள்வீர்கள்.

தனுசு:

உறவினர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொலைத்த பொருட்கள் மீண்டும் கைகளுக்கு வந்து சேரும்.

மகரம் :

குழந்தைகளின் செயல்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கலை துறையில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவங்கள் கிடைக்கும். தேவையில்லாத வீண் அலைச்சல் உண்டாகலாம்.

கும்பம்:

உங்களின் திறமைக்கேற்ற பாராட்டுக்கள் கிடைக்கும். துணையுடன் சந்தித்த பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். பணம் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த தடைகள் விலகும்.

மீனம்:

வேலை செய்யும் இடங்களில் சக ஊழியர்களின் ஆதரவை பெறுவீர்கள். கால்நடை மீது ஆர்வம் உண்டாகலாம். பிறரை பற்றி வீண் விமர்சனம் வைப்பதை தவிர்த்து விடுங்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US