இன்றைய ராசி பலன்(11-01-2026)
மேஷம்:
நண்பர்களுடன் ஒரு சில மனக்கசப்புகள் வரலாம். பயணங்களில் கவனம் வேண்டும். வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருங்கள். கோபத்தை தவிர்த்து விடுங்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை வரும்.
ரிஷபம்:
இன்று உங்களுடைய நலனுக்காக முக்கிய நபர்களிடமிருந்து ஆலோசனை பெறுவீர்கள். சொந்தங்கள் மத்தியில் இருந்து வந்து மன கசப்புகள் விலகும். வங்கி தொடர்பான பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.
மிதுனம்:
இன்று உங்கள் புத்திசாலித்தனமான பேச்சுக்களால் நீங்கள் பெரிய ஆபத்துகளில் இருந்து தப்பித்து விடுவீர்கள். புதிய நட்புகளின் அறிமுகம் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும் நாள்.
கடகம்:
இன்று முடிந்தவரை உங்கள் உடன்பிறந்தவர்களிடம் நீங்கள் எந்த ஒரு வாக்குவாதமும் வைத்துக் கொள்ளாதீர்கள். மன குழப்பங்கள் அதிகமாக இருக்கக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள்.
சிம்மம்:
உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்துங்கள். வம்பு வழக்குகளில் சிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். எடுக்கும் முயற்சியில் கால தாமதம் வரலாம். தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்.
கன்னி:
இன்று நண்பர்களுடன் நீங்கள் சுற்றுலா பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. சொந்தங்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நிற்கக்கூடிய நாள். மனதில் தெளிவு உண்டாகும்.
துலாம்:
முக்கியமான நபர்களிடத்தில் இருந்து உங்களுக்கு அழைப்புகள் வரலாம். நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். துணையுடன் ஏற்பட்ட மன கசப்புகள் விலகும்.
விருச்சிகம்:
சொந்தங்கள் மத்தியில் நீங்கள் உங்களுடைய குடும்பப் பிரச்சினைகள் பகிர்ந்து கொள்வதை தவிர்த்து விடுங்கள். புதிய நட்புகளின் அறிமுகம் கிடைக்கும். வருமான உயர்வை பற்றி சிந்திப்பீர்கள்.
தனுசு:
பிள்ளைகளைப் பற்றி பெருமை படக்கூடிய நாள். மூன்றாம் நபரிடமிருந்து உங்களுக்கு முக்கியமான செய்தி ஒன்று வந்து சேரும். நீண்ட நாள் முடிவிற்கு வராத விஷயம் நல்ல முடிவை பெறும்.
மகரம்:
எதிர்கால வாழ்க்கைக்கான திட்டமிடுதலில் நீங்கள் இறங்குவீர்கள். பொருளாதார உயர்வை பற்றிய சிந்தனையும் பயமும் உண்டாகும். போட்டி தேர்வுகளுக்கு தயாராக கூடிய மாணவர்கள் மனதில் தைரியம் பிறக்கும்.
கும்பம்:
உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழக்கூடிய நாள். தொழில் ரீதியாக நீங்க நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். மனதில் உள்ள குழப்பங்களுக்கு பதில் கிடைக்கும். எதையும் சாதிக்கலாம் என்ற வலிமை உண்டாகும்.
மீனம்:
பிள்ளைகள் விஷயங்களில் முக்கியமான முடிவுகள் எடுக்கக்கூடிய நாள். உங்களை சுற்றி உள்ளவர்கள் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பார்கள். வழக்கு தொடர்பாக முக்கிய நபரிடம் ஆலோசனை பெறுவீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |