நாளைய ராசிபலன் (05-07-2026)
மேஷம்:
வியாபாரத்தில் இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் கைகூடிவரும். வேலை தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கடன் பிரச்சனைகள் நல்ல முடிவை பெறும். பூர்வீக சொத்தில் இருந்த குழப்பம் விலகும்.
ரிஷபம்:
உயர் அதிகாரிகள் இடத்தில் தேவையில்லாத வாக்குவாதங்கள் செய்யாதீர்கள். முயற்சிகளில் தாமதம் ஏற்பட்டாலும் வெற்றியைப் பெறும். சுப காரிய செலவுகள் உண்டாகக் கூடிய நாள்.
மிதுனம்:
குழந்தைகளை பற்றிய புரிதல் உண்டாகும். அலுவலகப் பணிகளில் உங்களுடைய நிர்வாக திறமை வெளிப்படும். வியாபாரத்தில் சில முக்கியமான யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள்.
கடகம்:
தம்பதிகளுக்கு இடையே புரிதல் ஏற்படும். மற்றவர்களுடைய செயலால் மனதில் மாற்றம் உண்டாகும். கடன் விஷயங்களை சிந்தித்து செயல்படுவது அவசியம். வியாபாரத்தில் அலைச்சல் உண்டாக்கும்.
சிம்மம்:
பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் பயணங்கள் மூலம் சில முக்கிய புரிதல் உண்டாகும். இடம் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.
கன்னி:
உடல் ஆரோக்கியம் தொடர்பான சில பிரச்சனைகள் வரலாம். மனதளவில் பக்குவம் அடைவீர்கள். கடன் சார்ந்த தொழில்களில் இருந்து விடுபடக்கூடிய நாள். உடல் சோர்வு மறையும்.
துலாம்:
சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். கலைத்துறையில் நல்ல முன்னேற்றம் பிறக்கும். ஆசிரியர் தொழில் செய்பவர்களுக்கு நல்ல மாற்றம் உண்டாகும். தனிப்பட்ட கருத்துக்களை சொல்லும் பொழுது அமைதி காப்பது அவசியம்.
விருச்சிகம்:
பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான தெளிவு உண்டாகும். வேலையில் உங்களுடைய திறமை வெளிப்படும்.
தனுசு:
உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களில் அதிக ஆர்வம் உண்டாகும். உங்கள் மீதான விமர்சனங்கள் உறவினர்கள் மத்தியில் குறையும். தைரியமாக சில முடிவுகளை எடுக்கக்கூடிய தன்மை பிறக்கும்.
மகரம்:
தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் வேண்டும். நிலம் சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் உண்டு. பயணம் வழியாக புதிய அனுபவம் பெறுவீர்கள்.
கும்பம்:
பணி மாற்றம் சார்ந்த எண்ணங்கள் உயரும். எதிர்பாராத சில உதவிகளை பெறுவீர்கள். உயர்கல்வி சார்ந்த தெளிவு பிறக்கும். குழந்தைகளிடத்தில் பொறுமை உண்டாகும்.
மீனம்:
சுப காரிய நிகழ்ச்சிகள் உங்களுக்கு கைகூடி வரும். பயணங்களில் முன்னேற்றம் உண்டு. சமூக பணிகளில் அலைச்சல் அதிகரிக்கும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இல்லாமல் செயல்படுவது அவசியம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |