நாளைய ராசி பலன் (01-06-2026)
மேஷம்:
இன்று உங்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய பயமும் பதட்டமும் உண்டாகலாம். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும். சகோதரர் வழியாக மனக்கசப்புகள் உண்டாகலாம்.
ரிஷபம்:
இன்று தேவை இல்லாமல் யாரிடமும் உங்களுடைய சொந்த வாழ்க்கையை பற்றி பகிர்ந்து கொள்ளாதீர்கள். வேலைக்காக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும்.
மிதுனம்:
இன்று உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள். மனதில் இருந்து வந்த சஞ்சலம் விலகும். வீண் செலவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிக்கனம் அவசியம்.
கடகம்:
உங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். போட்டி பொறாமைகளை விடுத்து உங்களுக்காக சில வேலைகளை செய்தால் நன்மை உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.
சிம்மம்:
வியாபாரம் தொடர்பாக நீங்கள் முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். வருமானம் உயர்த்துவதற்கான வழிகளில் ஈடுபடுவீர்கள். பொருளாதார நெருக்கடிகள் உண்டாகலாம்.
கன்னி:
நீங்கள் எந்த வேலையை செய்ய வேண்டும் என்றாலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது அவசியம். யாருக்கும் தேவை இல்லாத வாக்குறுதிகள் கொடுக்காதீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்:
காலை முதல் இன்று நீங்கள் உடலிலும் மனதிலும் கவனம் செலுத்த வேண்டும். ஒரு சிலருக்கு தலைவலி போன்ற பிரச்சனைகள் வரலாம். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
விருச்சிகம்:
இன்று உங்களுக்கு புதிய நட்புகளின் அறிமுகம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினரிடம் மனம் விட்டு பேசுவீர்கள். வெளிநாடு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த கசப்புகள் விலகும்.
தனுசு:
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு சிலருக்கு திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். வாழ்க்கை துணையுடன் வீண் விவாதம் செய்யாதீர்கள்.
மகரம்:
நீண்ட நாள் யோசனைக்கு பிறகு ஒரு முக்கிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். தாய்வழி உறவுகளால் ஏற்பட்ட மன கசப்புகள் விலகும். குடும்பத்தில் உங்களுடைய பேச்சுக்கு மரியாதையும் முன்னுரிமையும் கிடைக்கும்.
கும்பம்:
மருத்துவ துறையில் இருப்பவர்கள் என்று கவனமாக இருக்க வேண்டும். அரசியல் ரீதியாக நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வங்கி தொடர்பான விஷயங்களில் இருந்த பிரச்சனைகள் விலகும்.
மீனம்:
வருமானம் உயர்த்துவதை பற்றிய ஆலோசனை செய்வீர்கள். கடன் அடைப்பதற்கான வழிகள் பிறக்கும். சொந்தங்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நிற்பீர்கள். குழந்தைகளால் பெருமை சேரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |