நாளைய ராசிபலன் (10-03-2026)

Report

 மேஷம்:

இன்று ஒரு சிலருக்கு கடினமான நாளாக இருக்கலாம். தொழில் ரீதியாக நீங்கள் ஒருவரிடம் கவனமாக பேச வேண்டும். குடும்பத்தினர் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். அமைதி காக்க வேண்டிய நாள்.

ரிஷபம்:

ஒருவரை நம்பி எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடாதீர்கள். பணம் தொடர்பான விஷயங்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பிரிந்து சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து பேசுவார்கள்.

மிதுனம்:

தாய்மாமன் வழி உறவுகளால் இருந்து வந்த சிக்கல் விலகும். சகோதரி வாழ்க்கையின் ஒரு முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். வண்டி வாகன மாற்றுவதைப் பற்றி யோசிப்பீர்கள்.

கடகம்:

இன்று உங்களின் மனச்சோர்வு விலகும். தொழில் ரீதியாக இருந்து வந்த எதிரிகள் விலகிச் செல்வார்கள். நண்பர்கள் வட்டாரம் விரிவடையும். அக்கம் பக்கத்தில் கவனமாக பேச வேண்டும்.

2026: தமிழ் புத்தாண்டு தனுசு ராசியினருக்கு எப்படி இருக்க போகிறது?

2026: தமிழ் புத்தாண்டு தனுசு ராசியினருக்கு எப்படி இருக்க போகிறது?

சிம்மம்:

இன்று வெளியூர் செல்லும் பொழுது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அரசியலில் இருப்பவர்களுக்கு மறைமுக எதிரிகள் வரலாம். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும்.

கன்னி:

தந்தையின் உடல் நிலையில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். சொந்தமாக முடிவெடுப்பது அவசியமாகும். திருமணத்தில் இருந்து வந்த கசப்புகள் விலகும். வேலைப்பளு குறையும்.

துலாம்:

இன்று உங்களுக்காக சில நேரம் செலவு செய்வீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனையும் பயமும் உண்டாகும். நண்பர்கள் உங்களுக்கு முழு ஆதரவாக இருப்பார்கள். சிந்தனை நிறைந்த நாள்.

விருச்சிகம்:

மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு இன்று முக்கியமான நாள். வேலைக்காக செல்கின்ற காரியம் நல்ல முடிவைப் பெறும். சொந்தங்கள் மத்தியில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும்.

தனுசு:

இன்று மாணவர்கள் விளையாட்டு துறையில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். புதிய நட்புக்களின் அறிமுகம் பெறுவீர்கள். பிள்ளைகளின் வாழ்க்கை பற்றிய பயமும் கவலையும் உண்டாகும்.

தினமும் 5 நிமிடம் இதை செய்தால் வாழ்க்கையே மாறுமாம்.. என்ன தெரியுமா?

தினமும் 5 நிமிடம் இதை செய்தால் வாழ்க்கையே மாறுமாம்.. என்ன தெரியுமா?

மகரம்:

இன்று உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். வெளிநாடு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகும். மதியமே நற்செய்தி வந்து சேரும்.

கும்பம்:

மாணவர்கள் என்று அவர்களுடைய திறமையை வெளிப்படுத்துவார்கள். எதையும் தீர ஆலோசித்து முடிவு செய்வது நல்லது. அத்தை வழி உறவுகளால் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும்.

மீனம்:

இன்று நிலம் தொடர்பான விஷயங்களை இருந்து வந்த குழப்பங்கள் விலகும். இன்று சுற்றி உள்ளவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். தொழில் ரீதியாக முதலீடு செய்வது பற்றி ஆலோசனை செய்வீர்கள். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US