நாளைய ராசி பலன்(22-12-2025)
மேஷம்:
தொழில் வாழ்க்கையில் நீங்கள் கட்டாயமாக நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். மனைவி வழி சொந்தங்களால் உங்களுக்கு சில சிக்கல்கள் வரலாம். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ரிஷபம்:
மாமியார் மருமகளுக்கு இடையே சில சண்டைகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. தொழில் ரீதியாக நீங்கள் ஒரு சில கவனச் சிதறலால் சங்கடம் சந்திக்கலாம். கவனம் தேவை.
மிதுனம்:
உங்களின் எதிர்கால வாழ்க்கையை பற்றிய பயம் விலகும். தாய் உடல் நிலையில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பிறந்த சொந்தங்கள் மீண்டும் உங்களிடம் வந்து பேசுவார்கள்.
கடகம்:
தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். உடன் பிறந்தவர்களுடன் நீங்கள் நல்ல அன்பு பகிர்ந்து கொள்வீர்கள். வாழ்க்கை துணையால் சந்தித்த சங்கடம் விலகி நன்மை உண்டாகும் நாள்.
கன்னி:
எதிர்பாராத மனச்சோர்வுகள் சந்திக்க கூடும். உடன் பிறந்தவர்களிடம் நீங்கள் நிதானமாக பேசுங்கள். திருமண தொடர்பான விஷயங்களில் பொறுமையாக கையாள வேண்டும்.
துலாம்:
உங்களைப் பற்றி புரிந்து கொள்ள கூடிய அற்புதமான நாள். தொழில் ரீதியாக சில ஏற்றங்களை பெறுவீர்கள். துணையுடன் சந்தித்த சிக்கல்கள் மறையும். புதிய நட்பின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும்.
விருச்சிகம்:
இன்று நீங்கள் பயணங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். கோபத்தை குறைத்துக் கொண்டால் மட்டுமே அலுவலகத்தில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும்.
தனுசு:
இன்று உடலும் மனலும் மிகுந்த சோதனைக்கு உள்ளாக கூடும். பிள்ளைகள் உங்களுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருப்பார்கள். சொந்தங்களின் வருகையால் நன்மை உண்டாகும்.
மகரம்:
எதிர்பாராத நட்புகளின் அறிமுகம் கிடைக்கும். உங்களை விட்டு பிரிந்து சென்ற சொந்தங்கள் மீண்டும் உங்களிடம் வந்து பேசுவார்கள். மருத்துவ செலவுகளை சந்திக்கும் நாள்.
கும்பம்:
மாணவர்கள் படிப்பில் ஆர்வம் செலுத்த வேண்டும். வேலைக்காக நீங்கள் வெளியூர் அல்லது வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்தால் சாதகமாக அமையும். நினைத்தது சாதிக்கும் நாள்.
மீனம்:
உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். குலதெய்வ அருளால் உங்களுக்கு நன்மை உண்டாகும். குடும்பத்தில் உங்களுக்கு ஆதரவாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |