இன்றைய ராசி பலன்(09.01.2025)
மேஷம்:
உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது அவசியம்.கோபம் எரிச்சல் உண்டாகலாம்.அதனால் நிதானம் கடைபிடிப்பது அவசியம்.ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பிரச்னைகளை தொடர்ந்து சந்திக்கும் சூழ்நிலை உருவாகலாம்.
ரிஷபம்:
நீங்கள் செய்யும் வேலைகளுக்கு கடும் முயற்சிக்கு பின்னரே வெற்றி கிடைக்கும்.வியாபாரிகள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.வரவிற்கு ஏற்ற செலவும் கூடவே வரும்.வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
மிதுனம்:
உங்களின் நிதி நிலை சரி ஆகும்.பழைய பிரச்சன்னை ஒன்று மீண்டும் தலை எடுக்கும்.இருந்தாலும் அதை தைரியமாக எதிர்கொள்வீர்கள்.உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் முற்றிலுமாக குறையும்.
கடகம்:
விழிப்புடன் செயல்படுவதால் வேண்டாத பிரச்னைகள் விலகிப்போகும். உங்கள் அணுகுமுறையால் நினைத்ததை சாதிப்பீர்.நீண்டநாள் முயற்சி வெற்றியாகும். உறவினர்கள் ஆதரவுடன் ஒரு வேலையை முடிப்பீர்.
சிம்மம்:
பணியாளர்களின் உழைப்பு அதிகரிக்கும்.எதிர்பாராத பிரச்சனைகள் உங்களை மனஉளைச்சலுக்கு அளக்கலாம்.குடும்பமாக கோயில் வழிபாட்டில் கலந்து கொள்வீர்கள்.எதையும் எதிர்த்து போராடும் தைரியம் பிறக்கும்.
கன்னி:
உங்கள் எதிர்பார்ப்புகளில் தடை, தாமதம் ஏற்படும். சிரமங்கள் சூழும். வேலைபளு அதிகரிக்கும்.ஒவ்வொரு முயற்சியிலும் கவனம் தேவை. பிறரை நம்பி இன்று எந்த வேலைகளையும் ஒப்படைக்க வேண்டாம்.
துலாம்:
இன்று உங்களுக்கு சந்தோஷமான நாள்.நீங்கள் எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு கிடைக்கும்.வரும் பிரச்சனைகளை எளிதாக சமாளித்து விடுவீர்கள்.குடும்பத்தில் உண்டான குழப்பம் விலகும்.
விருச்சிகம்:
மறைமுகமாக தொல்லை கொடுத்தவர்கள் விலகிச் செல்வர். உடல்நிலையும் மன நிலையும் சீராகும்.நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். வழக்கு விவகாரம் சாதகமாகும். வரவு அதிகரிக்கும்.
தனுசு:
உங்கள் செயல்களில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும்.நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த வேலை இன்று நடந்தேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
மகரம்:
சில வேலைகளில் போராடி வெற்றி காண்பீர். உழைப்பிற்கேற்ற வருவாய் உண்டாகும்.வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.
கும்பம்:
எதிரிகள் கை ஓங்கும் என்றாலும் அனைத்தையும் சமாளித்து வெற்றி அடைவீர். உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம்.நீங்கள் ஒப்புக்கொண்ட வேலையை முடித்துக் கொடுப்பீர்.
மீனம்:
அலுவலகத்தில் உடன் பணிபுரிவோர்களுடன் சில சங்கடம் தோன்றலாம்.பண விவகாரத்தில் உங்களுக்கு ஏற்பட்ட தொந்தரவுகள் விலகும்.நினைத்தது நிறைவேறும்.புதிய பொருட்களை வாங்குவீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |