இன்றைய ராசிபலன் (09-12-2024)

Report

மேஷம்

வேலையில் தங்கள் கணவரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். தொழிலதிபர்களிடமிருந்து வேலையாட்கள் தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள்.

ரிஷபம்

பெண்கள் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வது அவசியம். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். தங்கள் பிள்ளை அயல்நாடு செல்வார். பணவரவு நன்றாக இருக்கும். நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது. தம்பதிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.

மிதுனம்

அரசு டென்டர் போன்றவைகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவர். கலைஞர்களுக்கு வரவேண்டிய மீதித் தொகை வந்து சேரும். கணவன், மனைவி ஒற்றுமை இருப்பர். வியாபாரம் செழிப்புறும். குடும்பத் தலைவிகள் வீட்டிற்கு தேவையான அத்தியாசிய பொருள்களை வாங்குவர்.

கடகம்

பெண்களுக்கு அக்கம் பக்கத்தாரின் உதவி கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள் தங்கள் சொல்படி நடப்பர். பெண்கள் வீட்டினை தாங்கள் அழகு படுத்தி மகிழ்வீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நிம்மதி உண்டு. குழந்தைகளுக்கு மகிழ்ச்சி நிலவும்.

சிம்மம்

இன்று மகம் நட்சத்திரகாரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.

கன்னி

நீண்ட நாள் வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். வெளி உணவுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை நம்புங்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். பற்று வரவு வசூலாகும். உடல் நலனில் கவனம் வேண்டும்.

துலாம்

இரவில் நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும்.வரவேண்டிய பணம் இன்று வசூலாகும். தந்தைவழி சொத்து கைக்கு வரும். கல்யாணம், கிரகப் பிரவேசத்தில் கலந்து கொண்டு முதல் மரியாதையைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும்.

விருச்சிகம்

பிள்ளைகள் தங்கள் சொல்படி நடப்பர். மார்கெட்டிங்பிரிவினர் அதிக ஆர்டர்கள் பெறுவர். கணவனிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. உடல் நலம் தேறும். நட்பு வட்டம் விரிவடையும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும்.இருப்பினும் வேலையை குறித்த நேரத்தில் முடித்துக் காட்டுவீர்கள்.

தனுசு

உத்யோகத்தில் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். எதிரிகள் சரணடைவர். பங்குச் சந்தையில் சற்று கூடுதல் கவணம் தேவை. வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். புதிய வகையில் தங்கள் வியாபாரத்தை பெருக்குவீர்கள். பல கிளைகள் துவங்க திட்டமிடுவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவர்.

மகரம்

ஆலய வழிபாடுகளில் ஈடுபடுவர். உடல் நலம் சிறக்கும். ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் மட்டும் கவனம் தேவை. பிள்ளைகளின் செயல்களில் கவனம் தேவை. அழகு நிலையங்கள் ஆரம்பிக்க திட்டமிடுவீர்கள். கணினி துறையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.

கும்பம்

சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். மாணவர்களின் நினைவாற்றல் கூடும். உத்யோகஸ்தர்கள் மேலிடத்தினரிடம் பகைத்துக் கொள்ளாதீர்கள். தம்பதிகளிடம் ஒற்றுமை கூடும். தேக ஆரோக்கியம் சிறக்கும்.

மீனம்

பெண்களுக்கு இடுப்பு கை, கால் வலி மற்றும் மாதவிடாய் போன்ற பிரச்சினைகள் நீங்கும். தம்பதிகளின் அன்யோன்யம் பெருகும். நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். மாணவர்கள் பகுதி படிப்பில் சேருவர். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வும் பாராட்டும் சலுகைகள் கிடைக்கும்.   

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.   
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US