சித்திரையின் முதல் நாள்: எந்த ராசிக்கு என்னென்ன பலன்கள்?
மேஷம் முதல் மீனம் வரையிலான இன்றைய நாளுக்கான பலன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
மேஷம்
எதிர்பார்த்த இடத்தில் உதவிகள் கிடைக்கும், இல்லம் தேடி மகிழ்ச்சியான செய்தி வந்துசேரும், தொழிலில் முன்னேற்றம் உண்டு, வருமானம் அதிகரிக்கும்.
ரிஷபம்
நண்பர்களின் உதவி கிடைக்கும், சிறு சிறு எதிர்பாராத செலவுகள் வரலாம், கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம், வியாபாரத்தில் வெற்றி உண்டாகும்.
மிதுனம்
குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும், வீட்டில் பெரியவர்கள் ஆதரவாக இருப்பார்கள், வியாபாரத்தில் நண்பர்கள் உதவி செய்வார்கள், புதிய பொருட்களை வாங்க நேரிடலாம்.
கடகம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்திடுங்கள், வெளியிடங்களில் புதிய நட்பு உருவாகலாம், சிக்கனமாக இருக்க வேண்டியது அவசியம், உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
சிம்மம்
பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள், சுப செய்திகள் வரும், குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும், வியாபாரத்தில் நண்பர்கள் வட்டம் பெருகும்.
கன்னி
நீண்டநாட்களாக இழுபறியில் இருந்த காரியம் முடிவுக்கு வரும், பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டு, உத்தியோகத்தில் மேலதிகாரியின் நம்பிக்கையை பெறுவீர்கள்.
துலாம்
இன்று நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்படலாம், தொழிலில் லாபம் உண்டாகும், குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது, உடல் ஆரோக்கியத்தில் கவமனமாக இருக்கவும்.
விருச்சிகம்
இன்று செலவு அதிகரிக்கலாம், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமுடன் இருப்பது நல்லது, பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம்.
தனுசு
குடும்பத்தில் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும், பொருளாதார குறித்த சிந்தனையில் அடுத்தடுத்த முடிவுகளை எடுக்கலாம், உடல்நிலை சீராகும், புதிய பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டுவீர்கள்.
மகரம்
சந்தோஷமான செய்திகள் வரும், நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும், புதிய நண்பர்கள் உருவாகலாம், மன நிம்மதியுடன் செயல்படும் நாள் இன்றாகும்.
கும்பம்
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள், சிந்தித்து செயல்பட வேண்டியது அவசியம், வியாபார ரீதியில் முன்னேற்றம் உண்டு, பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றுவீர்கள்.
மீனம்
ஆன்மீக வழிபாடுகளை மேற்கொள்வீர்கள், நண்பர்களால் மன அமைதி கிடைக்கும், பண வரவு இருந்தாலும் செலவுகள் உண்டாகலாம், மனைவி வழி உறவினர்களால் உதவிகள் உண்டு.