இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (20.04.2024)
மேஷம் முதல் மீனம் வரையிலான இன்றைய நாளுக்கான பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
மேஷம்
மிகவும் கவனமாக நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள் இன்றாகும், எதிர்மறை எண்ணங்களால் மனக்கவலைகள் வரலாம், குடும்ப பிரச்சனைகள் மேலும் சிக்கலை உருவாக்கும். நிதி தொடர்பில் முன்னேற்றம் உண்டு.
ரிஷபம்
உடல் நலனில் கவனம் எடுத்துக்கொள்ளுங்கள், பணியிடத்தில் சிரமங்கள் ஏற்படலாம், பொறுமையுடன் செயல்படுவது நல்லது, இன்று புதிய விடயங்களை கற்றுக்கொள்வீர்கள்.
மிதுனம்
புதிய வாய்ப்புகள் தேடி வரும் நாள் இன்றாகும், குடும்பத்தினரின் ஆதரவு உண்டு, திருமண வாழ்க்கையில் வெற்றி காண்பீர்கள், சுறுசுறுப்புடன் செயல்பட்டு வேலைகளை கச்சிதமாக முடிப்பீர்கள்.
கடகம்
உங்களின் கனவு நிறைவேறும் நாள் இன்றாகும், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு, உழைப்பின் பலனாக வெற்றியை ருசிப்பீர்கள்.
சிம்மம்
வேலையில் கவனமாக செயல்பட வேண்டிய நாள் இன்றாகும், நேர்மறையான எண்ணத்துடன் செயல்பட்டு சிக்கலான சூழ்நிலைகளுக்கு தீர்வு காணுங்கள், தேவையில்லாத செலவுகள் ஏற்படலாம்.
கன்னி
கோபத்தில் எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டும், செலவுகள் அதிகரிக்கலாம், எதிர்மறையான சிந்தனைகளை மேலோங்க விட வேண்டாம்.
துலாம்
பதவி உயர்வு கிடைக்கப்பெறும் நாள் இன்றாகும், மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கலாம், உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டு, குடும்பத்தில் சந்தோஷம் நீடிக்கும்.
விருச்சிகம்
பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கப்பெறும் நாள் இன்றாகும், முதலீடுகள் லாபத்தை பெற்றுத்தரும், வருமானம் அதிகரிக்கும், சொத்து தொடர்பான பிரச்சனைக்கு தீர்வை காண்பீர்கள்.
தனுசு
இன்று கவனமுடன் செயல்படுவது நல்லது, கோபத்தில் எந்தவொரு முடிவும் எடுக்க வேண்டாம், நேர்மறை எண்ணத்துடன் செயல்படுங்கள், நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
மகரம்
நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் நாள் இன்றாகும், குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும், வருமானம் அதிகரிக்கும், உங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
கும்பம்
பணியிடத்தில் சிரமங்களை சந்திக்கலாம், இன்று புதிய முதலீடுகளை தவிர்த்து விடுங்கள், சொத்து தொடர்பான பிரச்சனையில் சாதகமான முடிவுகள் கிடைக்கும், ஆரோக்கியத்தில் கவனமுடன் இருக்கவும்.
மீனம்
மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நாள் இன்றாகும், இலக்குகளை அடைய ஆர்வத்துடன் உழைப்பீர்கள், குடும்பத்தில் பொறுப்பு அதிகரிக்கும், திட்டமிட்டு காரியத்தை சுலபமாக முடிப்பீர்கள்.