இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (27.04.2024)

Daily Rasi Palan Tamil
By Fathima Apr 27, 2024 03:41 AM GMT
Fathima

Fathima

Report

மேஷம் முதல் மீனம் வரையிலான இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

மேஷம்

உங்களுக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது, பணியிடத்தில் கவனமுடன் இருக்கவும், நீங்கள் எதிர்பார்த்த வேலைகள் முடிவுக்கு வராமல் போகலாம், மன சங்கடம் ஏற்படலாம்.

ரிஷபம்

எடுத்த காரியம் வெற்றியடையும் நாள் இன்றாகும், உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும், வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

மிதுனம்

பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டு, பூர்வீக சொத்துக்கள் கிடைக்கப்பெறும், நண்பர்களின் உதவி கிடைக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்தி தரும். 

கடகம்

இன்று சுபசெய்திகள் வந்து சேரும், நிதானத்துடன் செயல்படுவது நல்லது, தொழிலில் முன்னேற்றம் உண்டு, ஆனாலும் வரவும் செலவும் சமமாக இருக்கும். 

சிம்மம்

எதிர்காலத்தை நோக்கி திட்டமிடுவீர்கள், வரவை காட்டிலும் செலவு அதிகரிக்கலாம், மனைவி வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும், சுபகாரியங்கள் கைகூடும். 

கன்னி

ஆன்மீகத்தில் முழுஈடுபாட்டுடன் இருப்பீர்கள், மனதில் இருந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும், பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கலாம். 

துலாம்

தொழிலை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்ற செலவு செய்வீர்கள், கடனை திரும்ப பெறுவதில் தாமதம் ஏற்படலாம், நண்பர்களி்ன் உதவி கிடைக்கும், வீடு- மனை வாங்க திட்டமிடலாம். 

விருச்சிகம்

இன்று தொழிலில் வருமானம் அதிகரிக்கும் நாள், உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும், விலையுயர்ந்த பொருட்கள் வாங்க திட்டமிடலாம், புதிய தொழில் தொடங்க திட்டமிடலாம். 

தனுசு

புதிய வாகனம் வாங்க திட்டமிடலாம், குடும்பத்தில் ஒற்றுமை குறையலாம், சுப காரியங்களுக்கு திட்டமிடலாம், புது நண்பர்களின் வரவு தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்கும். 

மகரம்

இன்று வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும், நண்பர்கள் வழியாக முன்னேற்ற செய்தி கிடைக்கும், ஆன்மீக காரியங்களில் ஈடுபடலாம், பணவரவு உண்டு. 

கும்பம்

இன்று மகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள், பணியிடத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள், வெளியூர் பயணங்கள் செல்ல திட்டமிடலாம், தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். 

மீனம்

பணியிடத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள், சிக்கனமாக செயல்படுவது நல்லது, எதிர்பாராத உதவிகள் கிடைக்கும், மனக்குழப்பம் ஏதும் இல்லாமல் திட்டமிட்டு செயல்படுங்கள்.

+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US