நாளைய ராசி பலன்(04-08-2025)

Report

மேஷம்:

குடும்பத்தில் உங்களுக்கான மதிப்புஉயரும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும். வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புகள் உள்ளது. மதியம் மேல் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்

ரிஷபம்:

காலையில் வேலை பளு அதிகரிக்கும். தாய்மாமன் உறவால் சில சங்கடங்கள் உருவாகும். நண்பர்களிடத்தில் கவனமாக இருக்க வேண்டும். மனதில் சில குழப்பங்கள் தோன்றி மறையும்.

மிதுனம்:

குடும்ப பிரச்சினைகளை மூன்றாம் நபரிடம் சொல்வதை தவிர்க்க வேண்டும். சகோதரிகளின் உறவில் கவனம் தேவை. உயர் அதிகாரிகளின் வாழ்த்துக்களை பெறுவீர்கள்.

கடகம்:

இன்று வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். மதியம் மேல் வேலைக்காக வெளியூர் செல்ல நேரலாம். குழந்தைகளுக்கு தேவையானதை பூர்த்தி செய்வீர்கள். நற்பெயர் பெறும் நாள்.

சிம்மம்:

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்கள் கோபத்தை குறைத்துக் கொள்வதால் சில சங்கடங்களை தவிர்க்கலாம். மனைவி வழி உறவால் நன்மைகள் பெறுவீர்கள். உடல் நலனில் முன்னேற்றம் தோன்றும்.

கன்னி:

இன்று உங்கள் பேச்சுக்கு குடும்பத்தில் மரியாதை இல்லாமல் போகலாம். தேவை இல்லாத விஷயங்களை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். மன அமைதிக்காக இறைவழிபாடு செய்யுங்கள்.

30 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் சனியின் ராஜயோகம்- இந்த ராசிகளின் கஷ்டம் தீர போகிறதாம்

30 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் சனியின் ராஜயோகம்- இந்த ராசிகளின் கஷ்டம் தீர போகிறதாம்

துலாம்:

மனதில் நம்பிக்கையும் தெளிவும் பிறக்கும். உடல் நிலையில் சில பாதிப்புகள் உருவாகலாம். உணவு பழக்க வழக்கங்களில் கவனம் அவசியம். தேவை இல்லாமல் பிறரிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும்.

விருச்சிகம்:

இன்று உங்கள் முன் கோபத்தால் சிலர் சங்கடங்களை சந்திப்பீர்கள். திடீர் மன முறிவு நண்பர்களிடையே ஏற்படலாம். கவனமாக செயல்பட வேண்டிய நாள்.

தனுசு:

பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் படிப்பில் தேர்ச்சி பெறுவார்கள். தாய் வழி உறவால் சில சங்கடங்கள் உருவாகும். மதியமேல் குடும்பத்துடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.

மகரம்:

தொழில் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். சொந்த ஊருக்கு செல்லும் வாய்ப்புகள் மதியமேல் உருவாகும்

கும்பம்:

பொருளாதார சிக்கல்கள் விலகும். மருத்துவர்களுக்கு இன்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். திருமண வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் அமையும். கடன் சுமை குறையும்

மீனம்:

உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய நாள். பிள்ளைகள் வாழ்வில் முன்னேற்றம் அடைவார்கள். குலதெய்வ வழிபாடு நன்மை அளிக்கும். நெருங்கிய நபரால் உதவிகள் கிடைக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US