நாளைய ராசிபலன் (24-08-2025)
மேஷம்:
இன்று நீங்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே புரிதலுக்கான சூழ்நிலை உருவாகும். நீங்கள் கேட்ட இடத்திலிருந்து பணம் கிடைக்கும்.
ரிஷபம்:
உங்களுடைய சொந்த வாழ்க்கையை பற்றி மூன்றாம் நபரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. சிறு பிரச்சனைகளும் பெரிய அளவிற்கு செல்லாமல் பார்த்துக் கொண்டால் ஆபத்தை தடுக்கலாம்.
மிதுனம்:
எதிர்கால வாழ்க்கையை பற்றிய முக்கியமான முடிவுகள் எடுப்பதில் குழப்பங்கள் உண்டாகும். இன்று உங்களை அறியாமல் சில தவறுகளை செய்ய நேரலாம். குடும்பத்துடன் சில பிரச்சினையை சந்திப்பீர்கள்.
கடகம்:
இன்று உங்களுடைய நட்பு வட்டாரத்தில் சில சங்கடமான சூழ்நிலையை சந்திப்பீர்கள். கணவன் வீட்டாருடன் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
சிம்மம்:
இன்று சுறுசுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய காதல் வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்புகள் விலகும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து செல்வீர்கள்.
கன்னி:
எதிர்காலம் பற்றிய மிகப்பெரிய பயம் மனதில் உருவாகும். உடன் பிறந்தவர்களால் சில சங்கடமான சூழ்நிலையை சந்திப்பீர்கள். வெளி நாடு செல்லும் திடீர் யோகம் உருவாகும்.
துலாம்:
மனதில் இரக்க சிந்தனை அதிகரிக்கும். சிலர் சமுதாயப் பணிகளில் ஈடுபடுவார்கள். உங்களுடைய மதிப்பு உங்களுடைய சுற்று வட்டாரத்தில் உயரப் போகிறது. வேலையில் அங்கீகாரம் கிடைக்கும்.
விருச்சிகம்:
இன்று உங்கள் குழந்தைக்கான சில மருத்துவ செலவுகளை சந்திக்கலாம். வெளியில் செல்லும்போது உங்களுடைய உடைமைகளில் கவனமாக இருக்க வேண்டும். பிரச்சினையை எளிதாக பேசி முடிப்பீர்கள்.
தனுசு:
நெருங்கிய நட்புகளால் சில எதிர்பாராத மகிழ்ச்சி நடக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மரியாதை கொடுப்பார்கள். வீண் வம்பு வழக்குகளில் சிக்கி கொள்ளாமல் இருப்பது நல்லது,
மகரம்:
இன்று ஒரு சிலருக்கு மிக பெரிய அதிர்ஷ்டம் தேடி வரும். மனதில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாக போகிறது. அரசியலில் உள்ளவர்களுக்கு அதிகமான செல்வாக்கு கிடைக்கும் நாள்.
மீனம்:
தேவை இல்லாமல் உங்கள் குடும்ப பிரச்சனையை பிறரிடம் கலந்து கொள்ளாதீர்கள். உங்கள் வீடுகளில் செல்வாக்கும் மதிப்பு உயரும். வெளியூர் செல்லும் அவசியம் மதியம் மேல் உருவாகலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







