இன்றைய ராசிபலன்கள் (28.06.2024)

By Fathima 9 months ago
Report

மேஷம் முதல் மீனம் வரையிலான இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் (28.06.2024).

மேஷம்

இன்று எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம், பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும், மாலை நேரத்தில் நல்ல செய்தி வந்து சேரும், பிள்ளைகள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்வார்கள்.

ரிஷபம் 

எடுத்த காரியத்தில் வெற்றி உண்டு, புதிய நண்பர்கள் கிடைக்கலாம், ஆரோக்கியத்தில் கவனமுடன் செயல்படவும், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். 

மிதுனம் 

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு, புதிய வியாபாரத்தில் முதலீடு செய்யலாம், நட்புகள் வட்டம் அதிகரிக்கும், மற்றவர்களுடன் பேசும் போது கவனமுடன் இருப்பது நல்லது.

கடகம் 

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருப்பது நல்லது, மனக்குழப்பங்கள் இல்லாமல் இருக்க யாருடனும் தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம், ஆரோக்கியத்தில் தொய்வு ஏற்படலாம். 

சிம்மம் 

நீண்டநாட்களாக வராமல் இருந்த பணம் வந்து சேரலாம், மற்றவர்களுடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை, உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.

கன்னி 

எதிர்பாராத பணவரவு உண்டு, குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும், எனினும் பிள்ளைகளால் நல்ல செய்தி வந்து சேரும்.

துலாம் 

தன்னம்பிக்கையுடன் முக்கிய முடிவுகளை எடுக்கலாம், வியாபாரத்தில் லாபம் உண்டு, திருமணம் கைகூடி வரும். 

விருச்சிகம் 

சில செயல்பாடுகளின் மூலம் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு, உடல்நலனில் அக்கறை தேவை, குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் நீங்கும்.

தனுசு

மனதில் குழப்பங்கள் ஏற்படும் என்பதால் புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது, தியானம் மேற்கொள்ளுங்கள், பொறுமை காக்கவும். 

மகரம் 

தைரியத்தின் முடிவுகளை எடுப்பீர்கள், தொழிலில் முக்கிய முடிவுகள் எடுக்கலாம், பணப்பிரச்சனை இருக்காது, குடும்பத்தில் கணவன்- மனைவி இடையேயான அன்யோன்யம் அதிகரிக்கும். 

கும்பம் 

இழுபறியில் இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும், திடீரென செலவுகள் வந்தாலும் அதை சமாளித்து ஏற்றுக்கொள்வீர்கள், இடையூறுகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். 

மீனம் 

எதிர்பாராத செலவுகள் உண்டு, புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US