நாளைய ராசி பலன் (12-03-2026)

Report

மேஷம்:

இன்று மனதில் தேவை இல்லாத சிந்தனை வந்து செல்லும். உடல் சோர்வு உண்டாகலாம். குடும்பத்தில் சில குழப்பங்கள் வந்து மறையும். நெருங்கியவர்கள் உங்களை காயப்படுத்தலாம்.

ரிஷபம்:

இன்று குடும்பத்தில் பிரச்சனை பெரிது படுத்தாமல் பார்த்து கொள்வது அவசியம். வேலை செய்யும் இடத்தில் சில மன சோர்வு சந்திப்பீர்கள். வெளியூர் பயணம் உங்களுக்கு சாதகமாக அமையும்.

மிதுனம்:

உறவினர்கள் உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் தேவை இல்லாத விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். தொழில் ரீதியாக சந்தித்த கஷ்டங்கள் விலகும்.

கடகம்:

தந்தை உடல் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகலாம். எதிர்பாராத இடத்தில் இருந்து உங்களுக்கு நினைத்த உதவிகள் கிடைக்கும்.

குழந்தை பாக்கியம் அருளும் கடை ஞாயிறு திருவிழா.. எங்கே தெரியுமா?

குழந்தை பாக்கியம் அருளும் கடை ஞாயிறு திருவிழா.. எங்கே தெரியுமா?

சிம்மம்:

அரசியலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சொந்தங்கள் மத்தியில் இருந்து வந்த மன கசப்புகள் விலகும். தாய் மாமனிடம் இருந்து வந்த பகை விலகும். உடன் பிறந்தவர் ஆலோசனை பெறுவீர்கள்.

கன்னி:

இன்று பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று சில முக்கியமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வேலை ரீதியாக சற்று அமைதியாக கையாள்வது அவசியம்.

துலாம்:

இன்று நீங்கள் பெருமை அடையும் நாள். வழக்கு விஷயங்களில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். மன அழுத்தம் விலகும். வீட்டிற்கு விருந்தினர் வருகை மகிழ்ச்சி கொடுக்கும் நாள்.

விருச்சிகம்:

இன்று தொழிலில் நல்ல வளர்ச்சி அடைவீர்கள். வாழ்க்கையின் துணையின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பீர்கள்.

மீன ராசியில் சந்திக்கும் 3 ராசிகள். மார்ச் 15க்கு பிறகு கட்டாயம் இது நடக்குமாம்

மீன ராசியில் சந்திக்கும் 3 ராசிகள். மார்ச் 15க்கு பிறகு கட்டாயம் இது நடக்குமாம்

தனுசு:

உங்கள் மனதில் இருந்த குழப்பம் விலகும். பெரியவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். தாய் உடல் நிலையில் சற்று கவனமாக இருக்க வேண்டிய நாள். மதியம் மேல் நற்செய்தி நடக்கும்.

மகரம்:

உடல்நிலையில் சிறு தொந்தரவுகள் வரலாம். உங்கள் வீடுகளில் இருந்து வந்த மன கசப்புகள் விலகி மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பொருளாதார சிக்கல் விலகும் நாள்.

கும்பம்:

நண்பர்களுடன் தொலை தூர பயணம் மேற்கொள்வீர்கள். தொழில் ரீதியாக இருந்து வந்த சிக்கல் விலகும் நாள். சிலருக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் நாள்.எதிரிகள் விலகி செல்வார்கள்.

மீனம்:

மனதில் உள்ள சந்தேகங்கள் விலகும் நாள். வழக்கு தொடர்பாக சில முக்கிய நபரை சந்திப்பீர்கள். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டிய நாள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US