நாளைய ராசி பலன்(29-12-2025)

Report

மேஷம்:

இன்று எதிலும் படபடப்பாக செயல்படாமல் நிதானமாக கையாள்வது அவசியம். தேவையில்லாத குழப்பங்களால் ஒரு தாழ்வு மனப்பான்மை வரலாம். பிடித்ததை செய்து மகிழுங்கள்.

ரிஷபம்:

குடும்பத்தில் உங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். ஆரோக்கியத்தில் நீங்கள் முழுமையான கவனம் செலுத்த வேண்டும். பயணம் செய்யும் பொழுது எதிலும் நிதானம் தேவை.

மிதுனம்:

சில பிரச்சனைகளுக்கு இன்று நீங்கள் ஒரு முக்கியமான மற்றும் தெளிவான முடிவை எடுப்பீர்கள். உங்கள் முயற்சிக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். பணவரவில் இருந்த கஷ்டங்கள் விலகும்.

கடகம்:

இன்று ஒரு சிலர் குடும்பத்துடன் கோவில் வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். வியாபாரத்தில் சந்தித்த சிக்கல்கள் விலகி லாபம் பெறக்கூடிய நாள்.

2026-ல் நடக்கும் செவ்வாய் ராகு சேர்க்கை..கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

2026-ல் நடக்கும் செவ்வாய் ராகு சேர்க்கை..கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

சிம்மம்:

உடல் ஆரோக்கியத்தில் இன்று மந்தமான நிலை வரலாம். கூட்டாளிகளுடன் தேவையில்லாத வம்பு வழக்குகள் வைத்துக் கொள்ளாதீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடும் பொழுது கவனம் தேவை.

கன்னி:

இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதில் சில தாமதம் வரலாம். சொந்த வாழ்க்கையில் உங்கள் மீது சில தேவை இல்லாத விமர்சனங்களை வைப்பார்கள். தொழில் ரீதியாக வெளியூர் செல்வீர்கள்.

துலாம்:

இன்று உங்களுக்கு மனதிற்கு மிகவும் நெருக்கமான நபரை சந்திப்பீர்கள். உறவினர்களால் ஏற்பட்ட கசப்புகள் விலகும். நினைத்ததை நிறைவேற்றக் கூடிய ஒரு அற்புதமான நாள்.

விருச்சிகம்:

குடும்பத்தில் உங்களின் கருத்துக்களுக்கு மதிப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழல் அமையும். வழக்கு விவகாரங்கள் சாதகமான பலனை கொடுக்கும்.

தனுசு:

முயற்சிகளில் புது அனுபவங்களை பெறுவீர்கள். வாழ்க்கை துணையால் உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண உதவிகளை பெறுவீர்கள்.

இந்த ஒன்று உங்களிடம் இருந்தால்.. எந்த கெட்ட நேரமும் உங்களை நெருங்காது

இந்த ஒன்று உங்களிடம் இருந்தால்.. எந்த கெட்ட நேரமும் உங்களை நெருங்காது

 

மகரம்:

வியாபாரம் தொடர்பாக நீங்கள் வெளியூர் செல்ல நேரலாம். குடும்பத்தில் உங்கள் உங்கள் பேச்சுக்கு சிலர் முக்கியத்துவம் கொடுக்காமல் போகலாம். உயர் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்:

குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். சொத்து வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு உண்டாகும். வேலை ரீதியாக புதிய அனுபவங்களை பெற்று பாராட்டுக்கள் பெறுவீர்கள்.

மீனம்:

மனதில் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உங்களுடைய புத்தி கூர்மையால் வியாபாரத்தில் ஒரு மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைவீர்கள். பெருமை நிறைந்த நாள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US