நாளைய ராசி பலன்(09-11-2025)
மேஷம்:
சிலருக்கு வேலையில் இடமாற்றம் வரலாம். மனைவியிடம் தேவை இல்லாத விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். மனதில் குழப்பங்கள் தோன்றி மறையும். நன்மையான நாள்.
ரிஷபம்:
குடும்பத்தில் முக்கியமான பேச்சு வார்த்தைகள் சண்டையில் முடியலாம். வியாபாரத்திற்காக முன்னேற்றம் அடைய நீங்கள் கடும் முயற்சி எடுப்பீர்கள் நாள். உழைப்பால் உயர்வீர்கள்.
மிதுனம்:
கடந்த கால சில தவறுகளால் இன்று நீங்கள் பதில் சொல்லக்கூடிய நிலை வரலாம். யாரையும் நம்பி எந்த வேலையும் கொடுக்காதீர்கள். நட்புகள் உங்களை விட்டு விலகும் நாள்.
கடகம்:
கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்க சற்று கால தாமதம் ஆகலாம். வங்கி தொடர்பான சில பிரச்சனைகள் வரும். வழக்கு விஷயங்களால் நீங்கள் மன அழுத்தம் பெறக்கூடிய நாள்.
சிம்மம்:
உங்கள் பொருளாதாரத்தில் சில ஏற்ற இறக்கங்கள் வரலாம். மனைவி வழி உறவுகளால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். அத்தை வழி உறவுகள் உங்களுக்கு சில சிக்கலை தரலாம்.
கன்னி:
வீட்டில் பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். சொந்த வாழ்க்கையில் கடந்த காலங்களில் செய்த தவறுகளை நினைத்து வருந்துவீர்கள். வருமானத்தில் சந்தித்த தடைகள் விலகும்.
துலாம்:
உடல் நிலையில் நீங்கள் முழுமையாக கவனம் செலுத்த வேண்டிய நாள். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம்.
விருச்சிகம்:
நீங்கள் உங்கள் எதிரியை மன்னித்து ஏற்கும் நாள். நட்புகளிடம் நீங்கள் நற்பெயர் எடுப்பீர்கள். வீட்டிற்கு விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். மதியம் மேல் நன்மை உண்டாகும்.
தனுசு:
உங்களை பற்றி நீங்கள் புரிந்து கொள்ளும் நாள். பழைய நினைவுகள் உங்களுக்கு சில கசப்பான அனுபவங்களை தரலாம். முடிந்த வரை குடும்பத்தினரிடம் கவனமாக பேசுங்கள்.
மகரம்:
தேவை இல்லாமல் கோபம் கொள்வதை தவிர்ப்பீர்கள். தங்கை வழி உறவுகள் உங்களுக்கு நல்ல ஆறுதலாக இருப்பார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களுக்கான நேரத்தை நீங்கள் செலவிடுவீர்கள்.
கும்பம்:
குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் வரலாம். எதிர்பாராத நபரிடம் இருந்து பரிசு பொருட்களை பெறுவீர்கள். வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மீனம்:
வீடுகளில் முக்கியமான வேலை ஒன்று எளிதாக முடிந்து விடும். நீங்கள் எதிர்பார்த்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |