இன்றைய ராசிபலன் (22.10.2024)

By Kirthiga Oct 22, 2024 04:06 AM GMT
Report

மேஷம்

உங்கள் முயற்சி இன்று எளிதாக வெற்றியாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.தடைபட்டிருந்த வேலை நடக்கும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். தொழிலில் வாடிக்கையாளர்கள் விருப்பமறிந்து செயல்படுவீர். பணவரவு திருப்திதரும்.

ரிஷபம்

எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பண வரவு திருப்தி தரும். நேற்றைய நெருக்கடி நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். பிரச்னைகளை சந்தித்தாலும் அதை சமாளித்து நினைத்ததை அடைவீர். வருவாய் அதிகரிக்கும்.

மிதுனம்

நெருக்கடிக்கு ஆளாகும் நாள். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதும், வாக்கு வாதங்களைத் தவிர்ப்பதும் நல்லது. புதிய முதலீடு இன்று வேண்டாம். சிறு வியாபாரி தங்கள் வியாபாரத்தில் கவனமுடன் செயல்படுவது அவசியம்.

கடகம்

எதிர்பாராத செலவுகளால் சங்கடம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடி தோன்றும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கைத் தேவை. நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாகவும் இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளரை அனுசரித்துச் செல்வது நல்லது. சோதனைகளை சந்தித்து சாதனை புரிவீர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வரவு செலவில் கவனம் தேவை.

சிம்மம்

தடைபட்ட வருவாய் வரும். எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். பணவரவு திருப்தி தரும். அரசு வழி முயற்சி லாபமாகும். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். நிதி நிலை உயரும்.

கன்னி

அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். வருவாய் அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு உயரும். பணிபுரியம் இடத்தில் பாராட்டு கூடும். உங்கள் திறமைக்கு மதிப்புண்டாகும். தடைகளை சந்தித்து உங்கள் முயற்சியால் முன்னேற்றம் காண்பீர். அந்நியர்கள் உதவியால் விருப்பம் நிறைவேறும்.

துலாம்

தெய்வ பலத்தால் விருப்பம் பூர்த்தியாகும். பண வரவில் இருந்த தடை நீங்கும். செயல்களில் லாபம் உண்டாகும். விஐபி களை சந்திப்பீர். நேற்று திட்டமிட்டிருந்த வேலையில் இன்று லாபமடைவீர். தடைகளைத் தாண்டி நினைத்ததை அடைவீர். உங்கள் முயற்சி நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும்.

விருச்சிகம்

கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். செயல்களில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும். ஒவ்வொரு வேலையிலும் விழிப்புடன் செயல்படுவது அவசியம். தேவையற்ற பிரச்னை தேடிவரும். மனம் குழப்பமடையும். உங்கள் வேலைகளில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும். பிரச்னை தேடிவரும். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

தனுசு

நெருக்கடி நீங்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் திட்டமிட்டிருந்த வேலைகளை முடிப்பீர். நினைத்ததை அடைவீர். நண்பர்கள் ஆதரவு பலம் தரும். திட்டமிட்டிருந்த வேலையை நடத்துவீர். வருமானம் உயரும். நேற்றிருந்த சங்கடம் தீரும். எதிர்பார்த்த பணம் வரும். கூட்டுத்தொழில் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.  

மகரம்

உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். பகைவர் தொல்லை விலகும். உடல்நிலை சீராகும். தொடர்ந்து வந்த பிரச்னை தீரும்.  உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். செய்துவரும் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். நினைத்த வேலை நடக்கும்.

கும்பம்

அவசர முடிவால் நெருக்கடியை சந்திப்பீர். குடும்பத்தில் பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் இடைவெளி அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் சிறு பிரச்னை தோன்றும். சாதுரியமாக செயல்பட்டு அதற்கு தீர்வு காண்பீர். நீங்கள் எதிர்பார்த்த வருவாய் வரும்.பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை மீண்டும் தோன்றும். உறவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். கவனமாக செயல்படுவது நல்லது.

மீனம்

அலைச்சல் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடி தோன்றும். எதிர்பாராத சங்கடங்களை சந்திக்க வேண்டி வரும். தாய்வழி உறவு உதவியால் உங்கள் வேலைகளை நடத்தி முடிப்பீர். உடல் நிலையில் சிறு சங்கடம் தோன்றும். வேலைகளில் சில சங்கடம் தோன்றும். உடன் பணி புரிபவர்களுடன் பிரச்னை தோன்றும். நிதானம் காப்பது நல்லது.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் 
+91 44 6634 5009
Direct
bakthi@ibctamil.com
Email US