இன்றைய ராசி பலன்(18-04-2025)
மேஷம்:
இன்று உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை தருவார்கள். நீங்கள் எதிர்கொள்ளும் முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்:
வெளியூர் பயணத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் எதிர்பார்ப்பில் சில தடைகள் உண்டாகும். போட்டியாளர்கள் விலகி செல்வார்கள். பிறரை அனுசரித்து செல்வது நன்மை தரும்.
மிதுனம்:
பாக்ய சனியால் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் உண்டான நெருக்கடிகள் விலகும். மனதில் தேவை இல்லாத குழப்பங்கள் உண்டாகும். தடைகளை தாண்டி வெற்றி அடைவீர்கள்.
கடகம்:
உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும். எதையும் தீர்க்கமாக யோசித்து செயல்படுவதால் நன்மை பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும்.
சிம்மம்:
சிலர் வீட்டில் தேவை இல்லாத பிரச்சனைகள் உண்டாகும். ஆறாமிட சந்திரனால் திறமை அதிகரிக்கும். செயல்களில் உண்டான பாதிப்புகள் விலகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கன்னி:
திட்டமிட்டு செயல்படுவீர். பாக்கிய குருவின் பார்வையால் வேலை நடக்கும். எடுத்த வேலையை நடத்தி முடிப்பீர். விருப்பம் பூர்த்தியாகும். திடீர் பயணம் ஏற்பட்டு அலைச்சலை ஏற்படுத்தும்.
துலாம்:
சுறுசுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். இழுபறியாக இருந்த வேலை நல்ல முறையில் முடிவு பெரும்.
விருச்சிகம்:
வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். பணவரவு திருப்தி தரும். தெளிவுடன் செயல்பட்டு தேவைகளை அடைவீர். கேட்ட இடத்தில் இருந்து பணம் வரும்.
தனுசு:
குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றிய சிந்தனை மேலோங்கும். உங்கள் மனதில் இனம் புரியாத சிந்தனை வளரும். புதிய முயற்சிகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
மகரம்:
திடீர் செலவு தோன்றி சங்கடத்திற்கு ஆளாவீர். எதிர்பார்ப்பு இழுபறியாகும். மனம் குழப்பமடையும். எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. அவசர வேலைகளை போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும்.
கும்பம்:
தொழிலை விரிவு செய்வது பற்றி யோசிப்பீர். வருமானம் திருப்தி தரும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். நண்பர்கள் உதவியால் உங்கள் வேலை நடக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
மீனம்:
நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாக அமையும். திருமணத்திற்கு வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் அமையும். குடும்ப உறுப்பினரை பற்றி தெரிந்து கொள்வீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |