ஜோதிடம்: தவறியும் வெள்ளிக்கிழமையில் இந்த செயலை செய்யாதீர்கள்
நம்முடைய ஜோதிட சாஸ்திரத்தில் வெள்ளி கிழமை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். அன்றைய தினம் மஹாலக்ஷ்மி தேவிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. அன்றைய தினம் பலரும் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். அப்படியாக வெள்ளிக்கிழமையில் நாம் வீடுகளில் செய்ய வேண்டிய விஷயங்கள் செய்யக்கூடாத விஷயங்களை பற்றி பார்ப்போம்.
நம் வீடுகளில் தினமும் காலை வேளை விளக்கு ஏற்ற முடியவில்லை என்றாலும் மாலை நேரத்தில் கட்டாயம் விளக்கு ஏற்றுவோம். அதாவது சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு அது 5.50 ஆக இருந்தாலும் 6.10 ஆக இருந்தாலும் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு ஒவ்வொரு வீட்டிற்கும் திருமகள் வருவார் என்பது ஐதீகம்.
அதனால் அவளை வரவேற்கும் வகையில் மாலை நேரம் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வோம். எனவே சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு ஒரு பொழுதும் வீட்டை பெருக்க கூடாது. அதே போல் அன்றைய தினம் சேர்ந்த குப்பைகளை நாம் மாலை 6 மணிக்கு மேல் வெளியே கொட்ட கூடாது.
அவ்வாறு செய்வதால் வீட்டில் உள்ள செல்வங்கள் வெளியே சென்று விடும் என்று சொல்கிறார்கள். மேலும் வெள்ளிக்கிழமை அன்று வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவுதல், துடைத்தல் போன்ற விஷயங்கள் ஒரு பொழுதும் செய்யக்கூடாது.
வெள்ளிக் கிழமை காலை முதலே திருமகள் வாசம் செய்வார். எனவே வியாழக்கிழமை அன்றே வீடு துடைத்து சுத்தம் செய்து வைத்து கொண்டு, வெள்ளிக் கிழமை அன்று காலை முதலே விளக்கு ஏற்றி வழிபாடு செய்யவேண்டும். இவ்வாறு நாம் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தாலே மஹாலக்ஷ்மியின் அருளை பெறலாம் என்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |