இன்றைய ராசி பலன்(03-08-2025)
மேஷம்:
இன்று உங்களுக்கு எதிராக சிலர் செயல்பட வாய்ப்புகள் உள்ளது. உங்கள் வீடுகளில் சந்தித்த பிரச்சனைகள் விலகும். முன்னோர்கள் வழிபாடு நன்மை அளிக்கும். உடன் பிறந்தவர்களால் ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்:
குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவு செய்வீர்கள். பொருளாதாரத்தில் ஏற்பட்ட சிக்கல் விலகும். உங்களுக்கு பிடித்த நபர்களை சந்தித்து மகிழ்ச்சியான நேரத்தை செலவு செய்வீர்கள்.
மிதுனம்:
உங்களுக்கு எதிராக சிலர் அலுவலகத்தில் வேலை செய்ய வாய்ப்புகள் உண்டு. கவனமாக செயல்பட வேண்டிய நாள். தாய் உடல் நிலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்:
விலகிச்சென்ற உறவுகள் உங்களைத் தேடிவருவர். எடுத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு கரையும்.
சிம்மம்:
இன்று உங்கள் வியாபாரத்தில் சந்தித்த சிக்கல்கள் விலகும். புதிய முதலீடுகள் செய்யும் யோசனையை தள்ளி வைப்பது நல்லது. தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.
கன்னி:
மாணவர்களுக்கு படிப்பில் சில சிக்கல் உண்டாகும். பெற்றோர்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். ஆரோக்கியத்தில் உண்டான குறைபாடுகள் விலகும்.
துலாம்:
உடல் நிலையில் உள்ள நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கை தொடர்பான விஷயங்களில் உண்டான சிக்கல் சரி ஆகும். உங்களுக்கு பிடித்த விஷயங்களை வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சிகம்:
சிலர் உங்களைக் குறைசொல்வர். அதற்கு பதில் சொல்ல வேண்டாம். வெளியூர் பயணத்தில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். கடன் கொடுப்பதை இன்று தவிர்க்கவும்.
தனுசு:
குடும்பத்தில் சிறு சிறு சண்டைகள் வந்து மறையும். தாய் மாமன் உறவால் உதவிகள் கிடைக்கும். வீடுகளில் எதிர்பாராத விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். நன்மையான நாள்.
மகரம்:
உழைப்பும் அலைச்சலும் அதிகரிக்கும். எதிர்பார்த்த வருமானம் இழுபறியாகும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்
கும்பம்:
அரசியல் வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். நீண்ட நாட்களாக காத்திருந்த விஷயம் உங்களுக்கு சாதகமாக முடியும்.
மீனம்:
குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உருவாகும். பணியிடத்தில் உருவான பிரச்சனை நல்ல முடிவைப் பெரும். இன்று முடிந்து வரை அவசர வேலைகளில் ஈடுபடாமல் இருக்கலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







