இன்றைய ராசி பலன்(06.11.2024)
மேஷம்
பெரியோர் உதவியுடன் உங்கள் வேலைகளை நடத்திக் கொள்வீர்கள். வரவேண்டிய பணம் வரும்.நீங்கள் மேற்கொள்ளும் செயல் லாபமாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.
ரிஷபம்
உங்கள் செயல்களில் நெருக்கடி ஏற்படும்.வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.பிறரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும். சட்டத்திற்கு புறம்பான செயல்களால் சங்கடம் தோன்றும்.
மிதுனம்
வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும்.வியாபாரத்தில் இருந்த சங்கடங்களை சரி செய்வீர். எதிர்பார்த்த வரவு வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.
கடகம்
மனதில் இருந்த குழப்பம் நீங்கும். தொழில் போட்டியாளர் விலகிச் செல்வர். வியாபாரத்தில் வரவு அதிகரிக்கும்.நீண்டநாட்களாக இழுபறியாக இருந்த விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.
சிம்மம்
வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் அதிகரிப்பர்.குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
கன்னி
செயல்களில் தடைகளை சந்திக்க வாய்ப்பிருப்பதால் கவனமாக செயல்படுவது நன்மையாகும்.எதிர்பார்த்த வரவுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நட்பு வட்டம் விரிவடையும்.
துலாம்
இளைய சகோதரர்கள் உதவியாக இருப்பர்.எதிர்ப்புகளை சமாளித்து எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்.பணியிடத்தில் செல்வாக்கு உயரும்.
விருச்சிகம்
வெளியூர் பயணத்தில் சில சங்கடங்களை சந்திப்பீர். உங்கள் வார்த்தைகளால் விரோதம் உண்டாகும்.கொடுத்து வைத்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.
தனுசு
மனதில் குழப்பம் இருந்தாலும் முயற்சியில் எதிர்பார்த்த நன்மையை அடைவீர். கொடுக்கல் வாங்கலில் நிதானம் அவசியம்.நீண்டநாள் பிரச்னை ஒன்றுக்கு தீர்வு காண்பீர்.
மகரம்
செல்வாக்கை வெளிக்காட்டுவதற்காக செலவுகள் செய்வீர்.வாழ்க்கைத் துணையின் ஆதரவால் உங்கள் வேலைகளை நடத்தி முடிப்பீர். பணிபுரியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.
கும்பம்
நண்பர்களுடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.செயல்கள் சாதகமாகும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். லாபம் அதிகரிக்கும்.
மீனம்
பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்சனை விலகும்.மேல் அதிகாரியின் பாராட்டு கிடைக்கும்.வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |