இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (09.08.2024)
மேஷம்
வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.நீண்ட நாள் நிலுவையில் இருந்த வழக்கு சாதகமாகும்.
ரிஷபம்
எதிலும் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கலாம்.உங்களது விருப்பம் நிறைவேறும்.புதிய இடம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
மிதுனம்
இன்று மேற்கொள்ளும் பயணத்தில் நிதானம் அவசியம்.எதிர்பாராத பிரச்னைகள் தேடி வரும்.உங்களுடைய விருப்பம் நிறைவேறும் நாள்.மனதில் இருந்த உங்கள் எண்ணம் பூர்த்தியாகும்.
கடகம்
வியாபாரம் செய்யும் இடத்தில் சில சங்கடங்களை சந்திப்பீர்கள். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தோன்றும்.தடைபட்டிருந்த செயல் நிறைவேறும்.குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்குவரும்.
சிம்மம்
கோயில் வழிபாட்டால் மனம் நிம்மதி அடையும்.குடும்பத்தில் நெருக்கடி விலகும்.நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபத்தை ஏற்படுத்தும்.
கன்னி
எதையும் பலமுறை யோசித்து திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். மனம் குழப்பம் அடையும்.உங்களுடைய திறமைக்கு பாராட்டு பெறுவீர்கள்.
துலாம்
வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த நன்மை ஏற்படாமல் போகும். உடலில் சோர்வு உண்டாகும். செயல்களில் லாபம் காணும் நாள். வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர். எதிர்பார்த்த வருவாய் வரும்.
விருச்சிகம்
நீங்கள் எதிர்பார்த்த பணம் வர தாமதமாகும்.எடுக்கும் முயற்சியால் லாபம் காண்பீர்கள்.வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
தனுசு
வியாபாரத்தில் உங்கள் முயற்சியால் லாபம் உண்டாகும்.நீண்டநாள் எண்ணம் நிறைவேறும்.கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்.பெரியவர்கள் ஆசீர்வாதத்தால் உங்கள் பணி சிறக்கும்.
மகரம்
உங்கள் முயற்சியில் எதிர்பாராத தடைகளை சந்திப்பீர்கள்.நீங்கள் எதிர்பார்த்த வரவு வரும். பண நெருக்கடி விலகும்.வியாபாரத்தில் போட்டியாளர் விலகிச் செல்வர்.
கும்பம்
இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பிரச்னை உங்களைத் தேடிவரும் சற்று கவனமாக இருக்க வேண்டிய நாள்.வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
மீனம்
பணிபுரியும் இடத்தில் நெருக்கடி சந்திக்க நேரிடும்.உங்கள் வேலைகளில் குழப்பம் உண்டாகலாம். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபத்தை ஏற்படுத்தும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







