இன்றைய ராசி பலன்(03.11.2024)

Report

மேஷம்

வாகனத்தில் பயணம் செய்யும் பொழுது நிதானம் அவசியம்.வேலை பளு அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னைகள் தேடிவர வாய்ப்புகள் உள்ளதால் வீண் விவாதங்களை தடுப்பது நல்லது.

ரிஷபம்

கரிய வெற்றி ஆகும்.வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ள சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை மகிழ்ச்சியை தரும்.

மிதுனம்

நீண்ட நாள் முடிவிற்கு வராத பிரச்சனை ஒன்று முடிவு பெரும்.பணியிடத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்புண்டாகும். தொழில் கூட்டாளிகளுடன் ஏற்பட்ட சங்கடம் நீங்கும்.

கடகம்

பூர்வீக சொத்து விவகாரம் நல்ல முடிவை தரும்.திட்டமிட்ட வேலைகள் தடையின்றி நடந்தேறும். உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.

சிம்மம்

செலவுகள் செய்து பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்.வெளியூர் பயணத்தில் தடைகளும் தாமதமும் ஏற்படும். எந்த ஒன்றிலும் நிதானமாக செயல்படுவது நன்மையாகும்.

கன்னி

வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை வெற்றியாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.புதிய முயற்சியில் லாபம் காண்பீர்.பிறருக்கு உதவி செய்து மகிழ்வீர்.

துலாம்

நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு திருப்தி தரும்.நீண்டநாள் பிரச்னைகள் முடிவிற்கு வரும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

துன்பம் தீர விபூதியில் இந்த 1 பொருளை போட்டு வைத்தால் போதும்

துன்பம் தீர விபூதியில் இந்த 1 பொருளை போட்டு வைத்தால் போதும்

 

விருச்சிகம்

சிலருக்கு பணியிடத்தில் பிரச்னைகள் உண்டாகும். அமைதி காப்பது நன்மையாகும்.நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பண வரவு அதிகரிக்கும்.

தனுசு

வாகனத்தை இயக்குவதற்கு முன்பாக சரி பார்க்கவும்.எதிர்பாராத பயணமும் அலைச்சலும் உண்டாகும். பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர். மனம் குழப்பமடையும்.

மகரம்

நேற்றைய நெருக்கடிகள் நீங்கும்.செயல்கள் வெற்றியாகும்.நண்பர்கள் ஆதரவால் உங்களுக்கிருந்த பிரச்னைகள் விலகும். பண வரவு அதிகரிக்கும். தாராளமாக செலவுகள் செய்வீர்.

கும்பம்

குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மரியாதையை தருவார்கள். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும்.வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.நீண்ட நாள் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.

மீனம்

மனதில் இருந்த குழப்பம் விலகும். நண்பர் வழியே உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.நேற்று வரை மனதில் உண்டான சங்கடம் விலகும்.பிள்ளைகள் இடையே பிரச்சனைகள் ஏற்படலாம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US