துன்பம் தீர விபூதியில் இந்த 1 பொருளை போட்டு வைத்தால் போதும்
இந்துக்களின் மிக பெரிய பொக்கிஷமாக பார்க்கப்படுவது விபூதி.அப்படியாக நாம் எந்த கோயிலுக்கு சென்றாலும் அங்கிருந்து மறக்காமல் விபூதி எடுத்து வருவது உண்டு.அப்படி நம் வீட்டு பூஜை அறையில் இருக்கும் விபூதி கோவில் கருவறையில் இருக்கும் விபூதிக்கு சமமாகும்.
ஒவ்வொரு வீட்டு பூஜை அறையும் கோவில் கருவறைக்கு சமமானது என்கிறது சாஸ்திரங்கள். நாம் கோயிலுக்கு சென்று எவ்வளவு பக்தியோடும் அன்போடும் இறைவனை பார்த்து தரிசனம் செய்வோம் அதற்கு நிகர் தான் நம்முடைய வீட்டு பூஜை அறையும் அதில் நாம் வைத்து இருக்கும் பொருட்களும்.
இப்பொழுது நம்முடைய வீட்டில் இருக்கும் விபூதியில் சில பொருட்கள் சேர்த்து வைப்பதால் வீட்டில் உள்ள துன்பம் விலகி கூடுதல் பலன் கிடைக்கும்.அதை பற்றி பார்ப்போம். நம்முடைய வீட்டில் குங்குமம் இருக்கும் அதில் காய்ந்த துளசி இலைகள் 3, பச்சை கற்பூர பொடியைப் போட்டு கலந்து வைக்க வேண்டும்.
குங்குமத்தின் மகிமை பல மடங்காக உயர இந்த இரண்டு பொருட்களும் குங்குமத்துடன் கலந்து இருப்பது மிக மிக நல்லது. அடுத்தபடியாக மஞ்சள்தூள் இறைவனுக்கு பூஜைக்காக பயன்படுத்தக்கூடிய மஞ்சள்பொடி டப்பாவில் ஒரு சிறிய காட்டன் நூல், ஒரு சிறிய சூடம் போட்டு வைக்க வேண்டும்.
எல்லோராலும் பூஜைக்கு சுத்தமான சந்தன கட்டையை வாங்கி பயன்படுத்த முடியாது.சில பேர் வீடுகளில் கட்டையில் உரசும் சந்தனம் இருக்கும். சில பேர் வீடுகளில் சந்தனப்பொடி தான் இருக்கும். அந்த சந்தனப் பொடியில் சிறிய துண்டு சந்தனக்கட்டையை போட்டு வைப்பது மிக மிக நல்லது.
சந்தனத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளும் போதோ,சுவாமி படங்களுக்கு பொட்டு வைக்க பயன்படுத்தும் போதோ அதில் கொஞ்சமாக பன்னீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். மீதமிருக்கும் சந்தனத்தை அப்படியே உங்கள் வீட்டு பூஜை அறையில் வையுங்கள்.
பன்னீர் கலந்த சந்தனத்தில் இருந்து வெளிவரக்கூடிய வாசம் உங்கள் வீட்டு பூஜை அறையை கோவில் போலவே வைத்திருக்கும். அடுத்தபடியாக விபூதி,பொதுவாக நம்மில் பலபேர் வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது கண்டிப்பாக நெற்றியில் விபூதி வைத்து தான் செல்வோம்.
அப்படி பழக்கம் இல்லை என்றாலும் குழந்தைகளாக இருக்கட்டும், பெரியவர்களாக இருக்கட்டும் விபூதியை தினந்தோறும் நெற்றியில் இட்டு வரும் பழக்கத்தை கொண்டு வர நம்மை அது பல்வேறு ஆபத்துகளில் இருந்து காக்கிறது. நம்முடைய வீட்டில் உள்ள விபூதியில் ஒரு ருத்ராட்சம் போட்டு வைக்க வேண்டும்.
அந்த ருத்ராட்சம் சிவன் கோவிலில் இருந்து வாங்கப்பட்ட ருத்ராட்சமாக இருக்க வேண்டும்.விபூதியில் இருக்கக்கூடிய சக்தியே பலமடங்கு பெரியது. அந்த விபூதியில் ருத்ராட்சத்தை போட்டு வைக்கும்போது வீட்டில் இருக்கும் விபூதி இறை சக்தி நிறைந்த விபூதியாக மாறுகிறது.
சிவன் கோவிலில் இருந்து பெறப்படும் சுத்தமான பசுசான விபூதிக்கு உள்ள மகிமை உங்கள் வீட்டு விபூதிக்கு நிச்சயம் கிடைக்கும். வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்கள் திடீர் என்று எதையோ பார்த்து அழுவது உண்டு.அந்த நேரங்களில் விபூதி எடுத்தி பூச அவர்கள் நிதானம் அடைவார்கள்.
அந்த அளவிற்கு விபூதிக்கு மிக பெரிய சக்தி உண்டு. ருத்ராட்சமும் விபூதியும் எம்பெருமானுக்கு உகந்து பொருள் ஆகும்.இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக சேர்த்து பூஜையறையில் வைத்தால் நிச்சயமாக அந்த பிரசாதம் கோவில் கருவறைக்கு சமமானது தான்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |