இன்றைய ராசி பலன்(17.10.2024)
மேஷம்
வரவேண்டிய பணம் வரும். வெளியூர் பயணம் லாபமாக அமையும்.வரவு செலவில் கவனமாக இருப்பது நல்லது. காலையில் சில வேலைகள் தடங்கல் ஆனாலும் மாலையில் வெற்றிகரமாக முடியும்.
ரிஷபம்
அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி புரிவர்.நீங்கள் நினைத்தது இன்று எளிதாக நிறைவேறும். செல்வாக்கு உயரும்.
மிதுனம்
தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகளை சரி செய்வீர்.தடைபட்ட பணம் கைக்கு வரும்.அடிப்படைத் தேவை பூர்த்தியாகும்.சிறு வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றம் அமையும்.
கடகம்
சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.காலையில் நினைத்த வேலையை முடிப்பீர்கள்.வெளியூர் பயணம் லாபம் தரும். அரசு வழி முயற்சி லாபமாகும்.
சிம்மம்
மாலை வரை புதிய முயற்சிகளை எடுக்க வேண்டாம்.நெருக்கடியிலும் நன்மை அடைவீர். பணிபுரியும் இடத்தில் சில பிரச்னை தோன்றும். இருந்தாலும் சமாளித்து நன்மை அடைவீர்.
கன்னி
நண்பர் ஒத்துழைப்பால் தடைபட்ட வேலை நடக்கும்.தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த வருவாயை அடைவீர். வாழ்க்கைத் துணையின் ஆதரவுடன் வேலைகளை முடித்து வருமானம் காண்பீர்.
துலாம்
இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். பணிபுரியும் இடத்தில் உங்களது கோரிக்கை ஏற்கப்படும்.செயலில் இருந்த தடை நீங்கும். விருப்பம் நிறைவேறும்.
விருச்சிகம்
ஒரு சிலருக்கு புதிய சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.உறவினர்களுடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட வழக்கு தள்ளிப்போகும்.
தனுசு
பணிபுரியும் இடத்தில் கொடுத்த வேலையை செய்து முடிப்பீர். செல்வாக்கு உயரும்.இருந்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர். சிறு வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த வருமானம் வரும்.
மகரம்
புதிய முயற்சியை மேற்கொண்டு எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். தடைபட்டிருந்த வேலை நடந்தேறும்.வரவேண்டிய பணம் வரும்.தெய்வ சிந்தனை அதிகரிக்கும்.
கும்பம்
வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.பழைய கடன்களை அடைப்பீர்.
மீனம்
பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.மனக்குழப்பம் விலகி தெளிவடைவீர்.வழக்கு சம்மந்தமான விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.எதிர்பார்த்த பணம் வரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |