நாளைய ராசி பலன்(22-06-2025)

Report

மேஷம்:

ஒரு சிலருக்கு தோல் தொடர்பான வியாதிகள் ஏற்படலாம். உடல் நிலையில் சிறு சிறு உபாதைகள் தோன்றி மறையும். உணவு பழக்க வழக்கங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்:

நீண்ட நாட்களாக உங்களுக்கு தொந்தரவு கொடுத்த நபர்கள் உங்களை விட்டு விலகி செல்வார்கள். உங்கள் கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. தாய் வழி உறவால் நன்மை உண்டாகும்.

மிதுனம்:

இன்று உங்கள் சிந்தனையில் தெளிவு பிறக்கும். சுற்றி உள்ளவர்களின் உண்மை முகத்தை அறிந்து கொள்வீர்கள். மனதில் இறைசிந்தனை மேலோங்கும். பிரிந்த உறவுகள் உங்களை தேடி வருவார்கள்.

கடகம்:

தொழில் செய்யும் இடத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் எல்லாம் சரி ஆகும். பிறரிடம் தேவை இல்லாத வாக்குகளை கொடுக்க வேண்டாம். மூன்றாம் நபரின் உறவால் சில சிக்கலை சந்திப்பீர்கள்.

சிம்மம்:

தாய் உடல் நிலையில் சில தடுமாற்றத்தை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் இல்லாமல் போகலாம். வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்களுக்கு நன்மை தரும்.

கன்னி:

சகோதரன் வழி உறவால் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும். பிரிந்த சொந்தங்கள் உங்களை மீண்டும் வந்து சேரும். உணவு விஷயங்களில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

துலாம்:

இன்று நீங்கள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மன உளைச்சல் விலகும். திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள்.

துன்பங்கள் விலக நாளை(22-6-2025) செய்யவேண்டிய முருகப்பெருமான் வழிபாடு

துன்பங்கள் விலக நாளை(22-6-2025) செய்யவேண்டிய முருகப்பெருமான் வழிபாடு

விருச்சிகம்:

இன்று நீங்கள் எதிர்பாராத சில விஷயங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உருவாகி மறையும். மதியம் மேல் மருத்துவரை சந்திக்கும் நிலை உண்டாகலாம்.

தனுசு:

சிலருக்கு முதுகு வலி பிரச்சனைகள் உண்டாகும். பிள்ளைகள் உடல் நிலையில் அக்கறை செலுத்த வேண்டும். இறைவழிபாடு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். பிடித்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மகரம்:

மாணவர்கள் கல்வியில் அக்கறை செலுத்த வேண்டும். பெற்றோர்கள் உடல் நிலையில் அக்கறை செலுத்துவது அவசியம். வண்டி வாகனத்தில் கவனம் தேவை. பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரும் காலம்.

கும்பம்:

உங்கள் வாழ்க்கை ரகசியத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம். திருமண வரன் சிறப்பாக அமையும். முடிந்த வரை பிறரிடம் கடன் வாங்குவதை தவிர்ப்பது நன்மை தரும்.

மீனம்:

இன்று மனதிற்கு பிடித்த நிகழ்வு ஒன்று நடக்கும். இறைநம்பிக்கை அதிகரிக்கும். மனதில் உற்சாகம் உண்டாகும். உணவு விஷயங்களில் அக்கறை செலுத்துவது நன்மை தரும்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US