இன்றைய ராசி பலன்(21-05-2025)
மேஷம்:
இன்று உங்கள் வேலைகளில் கவனம் செலுத்திய வேண்டிய முக்கியமான நாளாகும். எதையும் தீர ஆலோசித்து முடிவு எடுப்பது நன்மை வழங்கும். உணவு விஷயங்களில் மிகவும் கவனம் தேவை.
ரிஷபம்:
குடும்பத்தில் எதிர்பாராத பிரச்சனைகளை சந்திப்பீர்கள். நேற்று வரை மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். எடுக்கும் முயற்சிகள் நல்ல வெற்றியை தேடிக்கொடுக்கும்.
மிதுனம்:
இன்று உடல் உபாதைகளால் மருத்துவமனைக்கு செல்லலாம். பெரியவர்கள் ஆதரவால் உங்கள் வீட்டில் நன்மை உண்டாகும். குடும்பத்தில் பொருளாதார நிலை உயரும்.
கடகம்:
மனக்குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. சந்திராஷ்டமம் தொடர்வதால் வழக்கமான வேலைகளிலும் நிதானம் அவசியம்.
சிம்மம்:
தொழில் ரீதியாக சந்தித்த பிரச்சனைகள் எல்லாம் நல்ல முடிவை பெரும். வாழ்க்கையில் சந்தித்த சிக்கல்கள் எல்லாம் விலகும். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.
கன்னி:
உங்கள் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் எல்லாம் விலகும். நீண்ட நாட்களாக உங்களுக்கு தொந்தரவு கொடுத்தவர்கள் உங்களை விட்டு விலகி செல்வார்கள். படிப்பு தொடர்பான விஷயம் சாதகமாக அமையும்.
துலாம்:
இன்று சிலர் தூக்கமின்மையால் அவதி உண்டாகலாம். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிடைக்கும். அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். ஆரோக்கியம் மேம்படும்.
விருச்சிகம்:
உழைப்பு அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் கூடுதல் கவனம் தேவை. வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது. தொழிலில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.
தனுசு:
உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். எதையும் துணிந்து செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு வெளியூர் செல்ல நேரலாம்.
மகரம்:
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். உங்கள் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.
கும்பம்:
உங்கள் செயலில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். நெருக்கடிக்கு ஆளாவீர். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.: வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். எதிர்பார்த்த வருவாய் வரும்.
மீனம்:
இன்று உங்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். மனதில் உள்ள சங்கடம் விலகும். பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவீர்கள். நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கலாம். கவனம் தேவை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |