இன்றைய ராசி பலன்(11-11-2025)
மேஷம்:
இன்று உங்கள் வீடுகளில் ஆன்மீக வழிபாடுகளில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். உங்கள் வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும் நாள். பிள்ளைகள் உடல் நிலையில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.
ரிஷபம்:
அத்தை வழி உறவுகளால் சில மன கசப்புகள் வரலாம். மதியம் மேல் நீங்கள் நினைத்த வேலை எதிர்பார்த்தது போல் நடக்கும். சிலருக்கு திடீர் பொன் பொருள் சேர்க்கை மகிழ்ச்சியை கொடுக்கும் நாள்.
மிதுனம்:
உங்கள் மனதில் தெளிவு பிறக்கும் நாள். சுற்றி உள்ளவர்களின் உண்மை முகத்தை தெரிந்து கொள்வீர்கள். தந்தை வழியே உங்களுக்கு சில எதிர்ப்புகள் சந்திக்கலாம். கவனமாக இருக்க வேண்டிய நாள்.
கடகம்:
தொழில் வாழ்க்கையில் சந்தித்த கடன் பிரச்சனைகளை சரி செய்வீர்கள். கணவன் உங்களுக்கு ஆதரவு அளிப்பார். குழந்தைகள் பெற்றோர்கள் பேச்சு கேட்டு நடப்பார்கள்.
சிம்மம்:
இன்று உங்களை பற்றி அதிகம் வெளி நபர்களிடம் சொல்லாதீர்கள். தொழில் வாழ்க்கையில் சில முக்கிய முடிவுகள் எடுக்க தள்ளுப்படுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காமல் போகலாம்.
கன்னி:
உங்கள் உடல் நிலையில் நீங்கள் முழு கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் சற்று சுயநலமாக இருப்பது உங்களுக்கு நன்மை அளிக்கும். குலதெய்வ வழிபாடு உங்களுக்கு நல்ல பலன் அளிக்கும்.
துலாம்:
உங்களுக்கு சில உண்மைகளை தெரிந்து கொள்ளும் நாள். இறைவழிபாட்டில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும் நாள்.
விருச்சிகம்:
உங்களை பற்றி புரிந்து கொள்ளும் நாள். மனதில் உள்ள கோபம் குறையும். தொழில் ரீதியாக உங்களை வளர்த்து கொள்ளும் நாள். நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு:
பிள்ளைகளால் உங்களுக்கு பெருமை அடையும் நாள். மனதில் இறை சிந்தனை அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.
மகரம்:
உங்களின் வேலையில் சந்தித்த தடைகள் யாவும் விலகும் நாள். உடன் இருப்பவர்கள் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். காதல் வாழ்க்கை இனிமையாக செல்லும் நாள்.
கும்பம்:
திட்டமிட்டபடி வெளியூர் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் உங்களுக்கான அங்கீகாரம் அதிகரிக்கும். பாராட்டுகளை பெற்று மகிழ்ச்சி அடையக்கூடிய நாள்.
மீனம்:
உங்கள் மனதில் தவறுகளை எண்ணி வருந்தும் நாள். வாழ்க்கை பற்றிய முக்கியமான புரிதல் உண்டாகும். சுற்றி உள்ளவர்களின் போலி முகம் அறிந்து செயல்படுவீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |