இன்றைய ராசி பலன்(18-10-2025)

Report

மேஷம்:

சிலருக்கு புதிய நட்புகள் அறிமுகம் கிடைக்கும். தொழில் ரீதியாக சில ஒப்பந்தங்களை போடுவீர்கள். நட்பு வட்டாரத்தில் சில வாக்கு வாதம் செய்வதை தவிர்த்து விடுங்கள்.

ரிஷபம்:

பழைய பிரச்சனைகள் நல்ல முடிவை பெறும். உங்களுக்கு நெருங்கியவர்கள் முழு ஆதரவும் கிடைக்கும். சகோதரி வழி உறவால் சில நன்மை நடக்க வாய்ப்புகள் உள்ளது.

மிதுனம்:

குடும்பத்திடம் உங்கள் மனதில் உள்ளதை முடிந்த வரை சொல்லாதீர்கள். திடீர் வெளியூர் பயணம் உங்களுக்கு சாதகமாக அமையும். வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

கடகம்:

நெருங்கிய நட்புகள் துணையால் நீங்கள் ஆதாயம் பெறுவீர்கள். கணவன் வழி சொந்தங்கள் உங்களுக்கு நன்மை தரும். அத்தை உறவுகளிடம் சற்று கவனமாக இருங்கள்.

சிம்மம்:

குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். பிள்ளைகள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். உங்களை சிலர் விமர்சனம் செய்வார்கள். 

கன்னி:

குடும்பத்துடன் வெளியூர் பயணங்கள் செல்வீர்கள். பண தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். பொருளாதாரத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகும்.

இந்த 2 ராசியில் பிறந்த ஆண் காதலனாக கிடைப்பவர்கள் கொடுத்து வைத்தவர்களாம்

இந்த 2 ராசியில் பிறந்த ஆண் காதலனாக கிடைப்பவர்கள் கொடுத்து வைத்தவர்களாம்

துலாம்:

உங்கள் மனதில் உள்ள கவலைகள் விலகும். தன்னம்பிக்கை பிறக்கும் நாள். குல தெய்வ வழிபாட்டால் நன்மை அடைவீர்கள். ஆரோக்கியத்தில் சில முன்னேற்றம் கிடைக்கும்.

விருச்சிகம்:

போட்டியை சமாளித்து வியாபாரத்தில் லாபம் காண்பீர். வருவாயில் இருந்த தடைகள் விலகும். உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்க முயன்றவர்கள் ஆச்சரியப்படும் வகையில் மாற்றத்தை சந்திப்பீர்.

தனுசு:

இன்று உணவு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். திருமண பந்தத்தில் கவனமாக இருக்க வேண்டும். சகோதரன் வழி உறவால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும்.

மகரம்:

வேலையில் உங்களுக்கு சில முன்னேற்றம் இருக்கும். வீண் கோபத்தை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் சிலருக்கு படிப்பில் கவனம் தேவை. நன்மையான நாள்.

கும்பம்:

பிள்ளைகள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். உங்களை சிலர் விமர்சனம் செய்வார்கள். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.

மீனம்:

இன்று சில உண்மை முகத்தை தெரிந்து கொள்வீர்கள். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். ஆரோக்கியத்தில் முழு கவனம் தேவை. ஆதாயம் பெரும் நாள்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US