நாளைய ராசி பலன்(14-09-2025)
மேஷம்:
இன்று ஒரு சிலருக்கு வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல்கள் உண்டாகலாம். ஒரு சிலருக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். வங்கி வழக்குகளை கவனமாக கையாளுங்கள்.
ரிஷபம்:
இன்று ஒரு சிலர் குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபாடு செலுத்துவீர்கள். காலை முதல் மனம் சற்று பதட்டமாக காணப்படும். வம்பு வழக்குகளில் சிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
மிதுனம்:
இன்று ஒரு சிலருக்கு எதிர்காலம் பற்றிய கவலை விலகும். தெரியாத நபர்களிடம் உங்கள் சொந்த வாழ்க்கையை பற்றி பகிர்ந்து கொள்ளாதீர்கள். உறவினர்கள் மத்தியில் சில சங்கடம் உண்டாகும்.
கடகம்:
முடிந்த வரை உங்களின் பொருளாதார வாழ்க்கையை பற்றி பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வது நன்மை உண்டாகும். மாலை மேல் நற்செய்தி வந்து சேரும்.
சிம்மம்:
வியாபாரத்தில் புதிய நட்புகளின் அறிமுகத்தால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சொந்தங்கள் மத்தியில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தாயின் உடல் நிலையில் அக்கறை செலுத்து வேண்டும்.
கன்னி:
மாணவர்களுக்கு இன்று உங்கள் திறமையை புரிந்து கொண்டு அதற்கான தேடுதலில் இறங்குவார்கள். சிலர் பெரியவர்களின் ஆசீர்வாதத்தை பெறுவார்கள். பிடித்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
துலாம்:
இன்று உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான சில ஏற்பாடுகள் செய்வீர்கள். உணவு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். உங்களை சுற்றி உள்ளவர்கள் உங்களை பற்றி புரிந்து கொள்வார்கள்.
விருச்சிகம்:
மறைமுக எதிரிகளின் தொல்லையால் சில கஷ்டங்களுக்கு ஆளாகக்கூடும். மதியம் மேல் சிலர் மருத்துவ செலவுகளை சந்திப்பார்கள். சகோதரி வழி உறவால் சில சிக்கலை சந்திக்கக்கூடும்.
தனுசு:
இன்று ஆசிரியர் தொழில் செய்பவர்களுக்கு இன்று முக்கியமான செய்தி வந்து சேரும். உங்களின் உறவினர்கள் வீட்டிற்கு சென்று மகிழ்ச்சியான நேரத்தை செலவு செய்வீர்கள். நன்மையான நாள்.
மகரம்:
உங்களின் தந்தை உங்களுக்கு முழு ஆதரவையும் வழங்குவார்கள். ஆடம்பர செலவுகளை செய்வதை தவிர்க்க வேண்டும். சிலருக்கு காதல் வாழ்க்கையில் சில சங்கடங்கள் உண்டாகலாம்.
கும்பம்:
இதுவரை இருந்த நெருக்கடிகளை விலகி தடைபட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தும், உடல்நிலையில் முன்னேற்றம், மன நிலையில் மகிழ்ச்சியை.
மீனம்:
சிலருக்கு நிலம் தொடர்பான பிரச்சனைகள் சந்திக்க வாய்ப்புகள் உள்ளது. ஒரு சிலருக்கு எதிர்ப்பாராத உறவினர்களால் சில சிக்கல்களை சந்திக்க வாய்ப்புகள் உள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







