நாளைய ராசிபலன் (15-09-2025)

Report

மேஷம்:

இன்று ஒரு சிலருக்கு வியாபாரத்தில் எதிர்பாராத தடைகளை சந்திக்க நேரலாம். காலை முதல் இறை வழிபாட்டில் உங்கள் மனதை ஈடுபடுத்தினால் வரும் துன்பங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

ரிஷபம்:

இன்று ஒரு சிலருக்கு மருத்துவ செலவுகளை சந்திக்க நேரலாம். தேவையில்லாமல் வீண் கோபமும் பிடிவாதமும் தவிர்ப்பது நல்லது. சொந்தங்களிடம் பேசும் பொழுது வார்த்தைகளில் மிக கவனமாக இருக்க வேண்டும்.

மிதுனம்:

மனதில் காதல் எண்ணம் அதிகரிக்கும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வீர்கள். வீடுகளில் சில எதிர்ப்புகள் உண்டாகும்.

கடகம்:

பொருளாதாரத்தில் சந்தித்து வந்த சிக்கல்கள் விலகுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வீர்கள். ஒரு சிலருக்கு மதியம் மேல் குடும்பங்களுடன் சுற்றுலா பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

சிம்மம்:

சிம்ம ராசியினருக்கு இன்றைய நாள் சற்று பதட்டமாக காணப்படும் நாள் என்றாலும் மதியம் மேல் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறி உங்களுக்கு சந்தோஷத்தை தேடி கொடுக்க போகிறது.

கன்னி:

கன்னி ராசியினருக்கு இன்று காலை முதல் சில பரிசுகள் சேரும் நாளாகும் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு பொருளாதாரத்தில் சில சிக்கல்கள் உண்டாகலாம்.

துலாம்:

துலாம் ராசியினர் இன்று உங்கள் மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் அனைத்தும் விலகும். நீங்கள் ஒரு பக்குவ நிலையை அடைவீர்கள். மாணவர்களுக்கு பொன்னான காலமாகும். வம்பு வழக்குகளை தவிர்த்து வெற்றி காண்பீர்கள்.

இந்த 3 ராசிகளிடம் மன்னிக்கும் குணமே இருக்காதாம் - அவர்கள் யார் தெரியுமா?

இந்த 3 ராசிகளிடம் மன்னிக்கும் குணமே இருக்காதாம் - அவர்கள் யார் தெரியுமா?

விருச்சிகம்:

மதியம் மேல் நீங்கள் உறவினர்கள் வீட்டிற்கு சென்று உங்கள் நேரத்தை செலவிடுவீர்கள். அண்ணன் தங்கை உறவில் சில சிக்கல்கள் உருவாகலாம். பொறுமை காக்க வேண்டிய நாள்.

தனுசு:

குடும்பங்களில் உங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்ற நம்பிய மனிதர்கள் உங்களை கைவிட நேரலாம். சகோதர உறவுகளிடம் வாக்குவாதங்களை செய்யாதீர்கள்.

மகரம்:

நினைப்பது நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் கூடும். ஒரு சிலர் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர். தொழிலில் போட்டியாளர் விலகிச் செல்வர். செல்வாக்கு உயரும்.

கும்பம்:

முடிந்தவரை உங்கள் நட்புகளிடம் முக்கியமான ரகசியங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். சிலருக்கு புத்தக வாசிப்பின் மீது அதிக ஆர்வம் உண்டாகும். வேலைப்பளு அதிகரிக்கும்.

மீனம்:

இன்று விவசாயிகளுக்கு ஒரு சங்கடமான நிலை உருவாகலாம். பிள்ளைகள் வழியே சில உண்மைகளை அறிந்து கொள்வீர்கள். தொழில் ரீதியாக முன்னேற்றதற்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US