நாளைய ராசி பலன்(28-09-2025)

Report

மேஷம்:

இன்று முடிந்த வரை தேவை இல்லாத சிக்கல்களில் சிக்கி கொள்ளாதீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது அவசியம். வேலையில் சிறிய பதட்டம் உண்டாகலாம்.

ரிஷபம்:

உங்களின் சொந்த ஊருக்கு சென்று மகிழ்ச்சியான நேரத்தை செலவிடும் நாள். பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். காதல் வாழ்க்கையில் சிலருக்கு ஏற்பட்ட கசப்புகள் விலகும்.

மிதுனம்:

முடிந்த வரை உங்கள் சொந்த வாழ்க்கையை பற்றி பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களை பற்றி சிலர் குறை சொல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. கவனம் தேவை.

கடகம்:

பொருளாதார ரீதியாக சிலருக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வம்பு வழக்குகளில் சிக்காமல் இருக்க வேண்டும். கடன் பிரச்சனையில் இருந்து விடுபடும் காலம் ஆகும். நன்மையான நாள்.

சிம்மம்:

தொழில் ரீதியாக சிலருக்கு வருமான உயர்வு கிடைக்கும். பெற்றோர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். கணவன் மனைவி உடல் நிலையில் கவனம் தேவை. மகிழ்ச்சியான நாள்.

கன்னி:

அலுவலத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். திருமண வாழ்க்கை சிலருக்கு சிறப்பாக அமையும். சகோதர சகோதிரி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும்.

துலாம்:

சிலருக்கு உடல் சோர்வு உண்டாகலாம். மதியம் மேல் சிலருக்கு எதிர்பார்த்த சிக்கல்கள் வந்து சேரும். தொலை தூர பயணம் செல்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிகம்:

ஒரு சிலருக்கு வேலை பளு அதிகரிக்கும். மனதில் உள்ள குழப்பத்திற்கு பதில் கிடைக்கும் நாள். உங்கள் முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வருமானம் உயரும் நாள்.

2025 நவராத்திரி: சென்னையில் இந்த கோவிலுக்கு மட்டும் செல்ல மறக்காதீர்கள்

2025 நவராத்திரி: சென்னையில் இந்த கோவிலுக்கு மட்டும் செல்ல மறக்காதீர்கள்

தனுசு:

காணாமல் போன பொருள் உங்களுக்கு கிடைக்கும். வண்டி வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக செல்ல வேண்டும். வேலையை சரியான முறையில் திட்டமிட்டு செய்து நன்மை அடைவீர்கள்.

மகரம்:

வியாபாரத்தில் சிலருக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நெருக்கடிகள் விலகும். நண்பர்களின் ஆதரவால் சிலருக்கு நன்மைகள் நடக்கும் நாள். நன்மையான நாள்.

கும்பம்:

இழுபறியாக இருந்த விஷயங்கள் அனைத்தும் நல்ல முடிவைப்பெறும். தொழில் ரீதியாக சந்தித்த பிரச்சனைகள் விலகும். ஆசிரியர் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

மீனம்:

நண்பர்கள் வழியே ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். நீண்ட நாட்களாக கைக்கு வரவேண்டிய பணம் வரும். எதிர்பார்ப்புகள் விலகும். விவசாயம் செய்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US