இன்றைய ராசி பலன்(06-07-2025)
மேஷம்:
இன்று குடும்பத்தில் சில சங்கடங்கள் தோன்றி மறையும் நாள். பிள்ளைகளுடன் சில கருத்துவேறுபாடுகள் ஏற்படலாம். அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படுவார்கள்.
ரிஷபம்:
மனதிற்கு பிடித்த விஷயங்கள் செய்து மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்கள் வட்டம் விரிவடையும். சொந்தங்கள் விலகி செல்லும் காலம் ஆகும்.
மிதுனம்:
சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் நல்ல முடிவைப்பெறும். சகோதரன் சகோதரி வழியே சில சங்கடங்கள் சந்திக்கக்கூடும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நன்மை அளிக்கும்.
கடகம்:
மன அழுத்தம் குறைய தியானம் போன்ற செயல்களில் ஈடுபடுவது நல்லது. பணத்தை வீணாக செலவு செய்யாமல் சேமிப்பது நன்மை அளிக்கும். பிள்ளைகளுடன் நேரத்தை செலவு செய்வீர்கள்.
சிம்மம்:
வியாபாரத்தில் எதிர்ப்பாராத லாபத்தை பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.
கன்னி:
இன்று காலை முதல் மந்தமாக காணப்படுவீர்கள். எதிர்பாராத குடும்ப சிக்கலைகளை சந்திக்க நேரலாம். வண்டி வாகனங்களில் காவனமாக செல்வது அவசியம். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு தேவை.
துலாம்:
இன்று உடல் அசதி உண்டாகும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் பற்றிய பேச்சு நல்ல முடிவைப்பெறும். நீண்ட நாட்களாக காத்திருந்த விஷயம் ஒன்று முடிவிற்கு வரும். நன்மையான நாள்.
விருச்சிகம்:
சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர். கடன் கொடுப்பதையும் புதிய முயற்சிகளையும் தவிருங்கள். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். வியாபாரத்தில் தோன்றிய எதிர்ப்புகள் விலகும்.
தனுசு:
இன்று பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். தாய் வழி உறவால் சில சங்கடங்களை சந்திக்க நேரலாம். உங்கள் கருத்துக்கு குடும்பத்தினர் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
மகரம்:
பொருளாதார நிலை உயரும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். உங்கள் முயற்சி வெற்றியாகும்.
கும்பம்:
இன்று நீங்கள் நினைத்த இடத்தில் இருந்து உதவி பெறுவீர்கள். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். வெளியூர் பயணம் சாதகமாக அமையும்.
மீனம்:
இன்று இறைவழிபாட்டில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிரிந்து சென்ற சொந்தம் உங்களுக்கு துணையாக வந்து நிற்பார்கள். வெளிநாடு செல்லும் யோகம் பெறுவீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |