இன்றைய ராசி பலன்(09-06-2025)

Report

மேஷம்:

பணியிடத்தில் உங்களுக்கு சில சங்கடங்கள் உருவாகும். இன்று முடிந்த அளவு இரவு நேர பயணத்தை தவிர்க்கவும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். சந்திராஷ்டமம் என்பதால் கவனம் அவசியம்.

ரிஷபம்:

உங்கள் உடல் நிலை சரி ஆகும். உங்களை தொந்தரவு செய்த போட்டியாளர்கள் விலகி செல்வார்கள். வீட்டிற்கு விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். தொலை தூர பயணம் நன்மையை தரும்.

மிதுனம்:

வியாபாரம் செய்யும் இடத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். திட்டமிட்டு வேலை செய்வதால் நன்மை உண்டாகும். பிறருக்காக உங்களை எதற்கும் மாற்றி கொள்ளாதீர்கள்.

கடகம்:

இன்று உங்கள் வேலையில் முழு கவனத்தை செலுத்த வேண்டும். பிள்ளைகள் பற்றிய எதிர்கால கவலை உண்டாகும். உங்கள் உழைப்பிற்கு சில சங்கடங்கள் உண்டாகலாம். கவனம் தேவை.

சிம்மம்:

உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி விலகும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிர்பார்த்த தகவல் வரும். சகோதரர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

வைகாசி விசாகம் 2025: இந்த விசாகத்தில் விரதம் இருந்தால் அடுத்த விசாகத்தில் கெட்டி மேளம்

வைகாசி விசாகம் 2025: இந்த விசாகத்தில் விரதம் இருந்தால் அடுத்த விசாகத்தில் கெட்டி மேளம்

கன்னி:

இன்று பணியிடத்தில் உங்கள் திறமை வெளிப்படும். சிலருக்கு வேலை காரணமாக வெளியூர் செல்ல நேரலாம். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வாங்கிய கடன்களை அடைப்பீர்கள்.

துலாம்:

நீண்ட நாட்களாக மனதில் இருந்த குழப்பம் விலகும். மனதிற்கு பிடித்தமான நாள். தொழிலில் சந்தித்த சிக்கல்கள் விலகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றிகரமாக அமையும்.

விருச்சிகம்: 

வியாபாரத்தில் லாபம் உண்டாகும். புதிய முயற்சிகளில் கவனமாக இருப்பது நன்மையாகும். எதிர்பாராத செலவுகளை சமாளிப்பீர். எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.

தனுசு:

உடலில் சில சங்கடங்கள் தோன்றி மறையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நட்புகளால் ஆதாயம் உண்டாகும். உங்கள் அவசர தேவைக்காக கடன் வாங்கும் நிலை உருவாகலாம். வீண் செலவுகள் உண்டாகும்.

மகரம்:

மற்றவர்கள் கூறும் குறைகளை காதில் வாங்காமல் செயல்படுவீர். வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர். வருமானம் உயரும். வாடிக்கையாளர் அதிகரிப்பர்.

கும்பம்:

நண்பர்கள் ஒத்துழைப்புடன் ஒரு முயற்சியை மேற்கொண்டு ஆதாயம் காண்பீர். உங்கள் செயல்களில் அந்நியர் குறுக்கீடு இருந்தாலும் அவற்றை முறியடித்து வெற்றியடைவீர்கள்.

மீனம்:

மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நன்மை தரும். நண்பர்களுடன் கவனமாக இருக்க வேண்டும்.      

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US