இன்றைய ராசி பலன்(28-06-2025)
மேஷம்:
இன்று உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சகோதரன் சகோதிரி வழி உறவில் நல்ல பிணைப்பு உண்டாகும். நண்பர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நன்மையான நாள்.
ரிஷபம்:
குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். கணவன் மனைவி இடையே சில கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தொலைத்தூர பயணம் உங்களுக்கு சாதகமாக அமையும்.
மிதுனம்:
மனதில் நீண்ட நாள் கவலை விலகும். பிரிந்து சென்ற உறவுகள் உங்களை மீண்டும் தேடி வருவார்கள். உணவு விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு வேலையில் சில சிக்கல் உண்டாகும்.
கடகம்:
மனதில் சில குழப்பங்கள் தோன்றி மறையும். பிள்ளைகள் ஏதிர்காலம் பற்றிய கவலை விலகும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட மோதல்கள் விலகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணும் நாள்.
சிம்மம்:
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை சந்திப்பீர்கள். கடின உழைப்பால் நற்பெயர் கிடைக்கும். சமுதாயத்தில் உங்களின் மதிப்பு உயரும். புதிய நட்புகள் அறிமுகம் உங்களுக்கு நன்மையை தரும்.
கன்னி:
மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். நட்பு வட்டாரத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும்.
துலாம்:
உங்களுக்கு மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். மனதில் உள்ள தாழ்வுமனப்பான்மை விலகும். அலுவலகத்தில் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும்.
விருச்சிகம்:
மனக் குழப்பங்கள் அதிகம் காணப்படுவதால் அதனை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். மகிழ்ச்சியை தக்க வைத்துக்கொள்ள உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும்.
தனுசு:
பிள்ளைகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சு நல்ல முடிவைக் கொடுக்கும். பெரியவர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
மகரம்:
உங்கள் குடும்பத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். தொழிலில் சில ஏற்ற இறக்கத்தை சந்திப்பீர்கள். மாணவர்கள் கட்டாயம் படிப்பில் முழு கவனத்தை செலுத்த வேண்டும்.
கும்பம்:
உங்கள் வீட்டிற்கு விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். நண்பர்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.
மீனம்:
உங்களை கஷ்டப்படுத்தியவர்கள் உங்களை விட்டு செல்வார்கள். தாய் வழி உறவால் சில சிக்கலை சந்திப்பீர்கள். சகோதரி உறவால் சிக்கல் உண்டாகும். மாலை மேல் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |