இன்றைய ராசி பலன்(23-05-2025)
மேஷம்:
இன்று குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் ஆற்றல் பிறக்கும். புதிய மனிதர்களின் சந்திப்பால் ஆதாயம் உண்டாகும். நன்மையான நாள்.
ரிஷபம்:
இன்று நீங்கள் எதிர்பார்த்த பணம் உங்கள் கைகளுக்கு வந்து சேரும். திருமணம் தொடர்பான விஷயங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் எல்லாம் விலகும். வெளியூர் பயணம் உங்களுக்கு சாதகமாக அமையும்.
மிதுனம்:
பழைய கடன்களை அடைக்கும் வாய்ப்புகள் உருவாகும். உங்கள் அறிவால் நினைத்ததை சாதிப்பீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட மன குழப்பங்கள் விலகும். சொந்த வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள் விலகும்.
கடகம்:
பெரியோர் ஆதரவால் வேலை நடக்கும். இஷ்ட தெய்வத்தை வழிபட்டு செயல்பட நன்மை உண்டாகும். உங்கள் பிரச்னைக்கு முடிவு காண்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
சிம்மம்:
உங்கள் வெளியூர் பயணம் உங்களுக்கு மன கசப்புகளை கொடுக்கலாம். தாய் உடல் நிலையில் கவனமாக இருக்க வேண்டும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகி செல்லும்.
கன்னி:
இன்று விவேகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் எல்லாம் விலகி செல்லும். சிலருக்கு உடல் நிலையில் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
துலாம்:
இன்று சுறுசுறுப்பாக வேலை செய்து நினைத்ததை சாதிப்பீர்கள். குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிகளில் பங்குகொள்வீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சிகம்:
நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும் என்றாலும், நீங்கள் ஈடுபடும் வேலைகளில் கவனமாக இருப்பது நல்லது. திட்டமிட்ட வேலைகளில் கவனம் செலுத்துவீர். வியாபாரத்தில் இருந்த தடை விலகும்.
தனுசு:
இன்று பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். உங்கள் வேலையில் சில சங்கடம் ஏற்பட்டாலும் நல்ல முடிவை பெரும். புதிய முதலீடுகளில் கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்:
வம்பு, வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். பணியாளர்களால் நன்மை ஏற்படும். எதிர்பார்த்த பணம் வரும். நினைத்ததை சாதிப்பீர். எண்ணத்தை இன்று சிதற விடவேண்டாம்.
கும்பம்:
வரவு அதிகரிக்கும். பிறருக்காக உங்களை மாற்றிக் கொள்வீர். மனம் விரும்புவதை அடைவீர். உங்கள் முயற்சி லாபமாகும். நீங்கள் ஈடுபடும் ஒவ்வொரு செயலிலும் நிதானமும் கவனமும் தேவை.
மீனம்:
இன்று கோயில் வழிபாடு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். மனைவி வழி உறவால் ஆதாயம் உண்டாகும். மனதில் சில குழப்பம் ஏற்பட்டாலும் மதியம் மேல் தெளிவு பெறுவீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |