ராசி பலன்(15-06-2025)

Report

மேஷம்:

நாளை இவர்களுக்கு புதிய நட்புகளின் அறிமுகம் கிடைக்கும். வெளியூர் செல்லும் வேலையில் சில தடைகளும் தாமதமும் உண்டாகும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருப்பது நன்மை அளிக்கும்.

ரிஷபம்:

நண்பர்களிடம் உங்கள் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. திருமண விஷயங்களில் மூன்றாம் நபரின் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

மிதுனம்:

மாணவர்களுக்கு படிப்பில் சில தடைகள் உண்டாகும். மனதில் குழப்பங்கள் தோன்றி மறையும். தந்தை வழியே உங்களுக்கு நினைத்த ஆதரவு கிடைக்கும். நினைத்த வேலை நடக்க தாமதம் ஆகலாம்.

கடகம்:

காலை முதல் தலைவலி போன்ற தொந்தரவுகள் வந்து மறையும். சகோதரன் வழியே நல்ல ஆதரவு கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றமும் வருமானமும் கிடைக்கும்.

சிம்மம்:

சிலர் வியாபாரத்தில் சில அழுத்தத்தை சாந்திக்கூடும். மனைவி ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். விரும்பிய பொருட்கள் வாங்குவதில் தடை ஏற்படும். அமைதி காப்பது நன்மை அளிக்கும்.

கன்னி:

வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு எதிராக சிலர் செயல் பட வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். நட்பு வட்டாரம் விரிவு அடையும்.

வீட்டில் பணம் தங்கவில்லையா? இந்த 6 விஷயங்கள் தான் காரணமாம்

வீட்டில் பணம் தங்கவில்லையா? இந்த 6 விஷயங்கள் தான் காரணமாம்

 

துலாம்:

மனதில் தைரியமும் நம்பிக்கையும் பிறக்கும். சுற்றி உள்ளவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். வேலையில் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சிகம்:

எதிர்காலம் பற்றிய கவலையும் பயமும் உண்டாகும். உங்களை பற்றி நெருங்கியவர்கள் தவறாக சொல்ல வாய்ப்புகள் உள்ளது. அமைதி காப்பது நன்மை தரும்.

தனுசு:

இறைவழிபாடு மட்டுமே உங்களுக்கு மன நிம்மதியை கொடுக்கும். தாய் வழி உறவால் உங்களுக்கு சில சிக்கல் உண்டாகலாம். மதியம் மேல் மன சங்கடங்கள் தோன்றி மறையும்.

மகரம்:  

உங்கள் திட்டங்களை கண்டிப்பாக பின்பற்றுங்கள். அப்போதுதான் சரியான நேரத்தில் வேலையை முடிக்க முடியும். உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. 

கும்பம்:

நெருங்கியவர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். உணவு விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முன்னோர்கள் வழிபாடு உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.

மீனம்:

சமுதாயத்தில் உங்கள் மதிப்பு உயரும். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். உங்கள் வாழ்க்கையில் முக்கியமான நபரை சந்திக்க வாய்ப்புகள் உள்ளது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US