தமிழகத்தில் டாப் 10 பணக்காரக்கோவில் எது தெரியுமா? முதலிடம் எந்த கோவிலுக்கு

By Sakthi Raj Oct 27, 2026 09:39 AM GMT
Report

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களின் எடுத்துக்கொண்டால் நம்முடைய தமிழகத்தில் மொத்தம் 46,341 கோவில்கள் மற்றும் மடங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதில் சுமார் 43,677 கோவில்கள், 24 ஜைன கோவில்கள், 45 மடங்கள், 81 மடங்களைச் சேர்ந்த கோவில்கள், 1298 அறக்கட்டளைகள் ஆகியவை அடங்குகிறது. இந்த கணக்கு தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற கோவில்கள் மட்டுமே.

தனியார் கோவில்கள் என்று எடுத்துக்கொண்டால் அவை ஏராளமான கோவில்கள் வரும். இப்படியாக, தமிழ்நாட்டில் சில ஆலயங்களுக்கு பக்தர்கள் முக்கியமான நாட்களில் மட்டுமே தரிசனம் செய்ய வருவது உண்டு. ஆனால் குறிப்பிட்ட சில ஆலயத்திற்கு மட்டுமே எல்லா நாட்களும் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவதை பார்க்கலாம்.

தமிழகத்தில் டாப் 10 பணக்காரக்கோவில் எது தெரியுமா? முதலிடம் எந்த கோவிலுக்கு | Top 10 Richest Temples In Tamil Nadu

இவ்வாறு ஒவ்வொரு ஆலயத்திற்கும் வரக்கூடிய பக்தர்கள் அந்த கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்துவது உண்டு. இன்னும் ஒரு சிலர் அவர்களுடைய வேண்டுதல்களை காணிக்கையாக செலுத்துவார்கள்.

அது பணம், தங்கம், வெள்ளி நகைகள் நன்கொடைகள் போன்றவை அடங்குகிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசின் அற நிலையத்திற்கு உட்பட்ட உண்டியல் காணிக்கை வருமான விபரங்கள் கணக்கிடப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

அப்படியாக, தமிழகத்தில் அதிக அளவில் வருமானம் பெறக்கூடிய டாப் 10 ஆலயங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வரிசையில், இந்த முறையும் பழனி முருகன் கோவிலில் முதல் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

தமிழகத்தில் அதிகம் வருமானம் பெறும் டாப் 10

கோவில்கள்:

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் ரூ.233.50 கோடி

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் ரூ.139.06 கோடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ரூ.131.38 கோடி

சமயபுரம் மாரியம்மன் கோவில், திருச்சி ரூ.111.09 கோடி

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் ரூ.74.98 கோடி

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ரூ.73.72 கோடி

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் ரூ.64.33 கோடி

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் ரூ.50.57 கோடி

மதுரை கள்ளழகர் கோவில் ரூ.34.20 கோடி

ஈரோடு பண்ணாரி அம்மன் கோவில் ரூ.29.16 கோடி

தமிழகத்தில் டாப் 10 பணக்காரக்கோவில் எது தெரியுமா? முதலிடம் எந்த கோவிலுக்கு | Top 10 Richest Temples In Tamil Nadu

பழனி கோவில் பக்தர்கள் தரிசன விபரம் :

முருகப்பெருமானுடைய அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக இருக்கக்கூடிய பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வருடத்திற்கு ரூபாய் 1.20 கோடிக்கு அதிகமான பக்தர்களும் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் சாதாரணமான நாட்கள் மற்றும் வார நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர். மேலும், பழனி கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தினமும் பத்தாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுவதாகவும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US